டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

வாகனங்களின் டயரை உயர்த்த பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. எத்தனை சதவீதம் அதன் டயர்களின் விலை உயர்த்தப்பட இருக்கின்றது?, எப்போது உயர்த்தப்பட இருக்கின்றது?, என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

பிரபல வாகன டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் இந்தியாவில் உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிஷ்லின் நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் ஆகும். இதுவே, எட்டு சதவீதம் வரை டயர்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

வரும் ஜூலை 18ம் தேதியில் இருந்து நிறுவனம் தயாரித்து வரும் அனைத்து வாகன டயர்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கின்றன. இடைப்பட்ட நாட்கள் வரை பழைய விலையிலேயே டயர்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

இதுகுறித்த அறிவிப்பையே நிறுவனம் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டிருக்கின்றது. அறிவிப்பில் நிறுவனம் கூறியதாவது, "ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை டயர்களின் விலையை உயர்த்த இருக்கின்றோம்" என கூறியிருக்கின்றது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

பயணிகள் கார்களின் டயர்களுக்கு 6 சதவீதம் வரையிலும், இலகு ரக ட்ரக் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் டயர்களின் விலையை 8 சதவீதம் வரையிலும் உயர்த்த இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

வர்த்த ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கான டயர்களுக்கும் இந்த விலையுயர்வு பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலையுயர்வை செய்திருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

இந்தியாவில் வரும் 18ம் தேதி முதலும், மத்திய கிழக்கு நாடுகளில் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்தும் புதிய விலையில் மிஷ்லின் டயர்கள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன. விலையேற்றம்குறித்த விபரங்கள் மிக விரைவில் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் வாயிலாக வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

மிஷ்லின் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை தமிழகத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. சுமார் 290 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் இந்த ஆலையிலேயே பேருந்து, லாரி, கார் மற்றும் மோட்டார்சைக்கிள் என அனைத்திற்குமான டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

நிறுவனத்தின் தலைமையகம் ஃபெர்ராண்டின், க்ளெர்மோண்டில் செயல்பட்டு வருகின்றது. தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின்கீழ் நேரடியாக 1,23,600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

டயரின் விலையை உயர்த்த நாள் குறித்த பிரபல நிறுவனம்... பெரியளவில் உயர்த்த திட்டம்... இப்போவே டயர மாத்திடுங்க...

நிறுவனத்திற்கென 71 டயர் உற்பத்தியாலைகள் உலகத்தில் செயப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆண்டுக்கு 170 மில்லியன் டயர்கள் உற்பத்தி என்ற விகிதத்தில் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Michelin Announced Price Hike In India. Read In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X