வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜி!

வாகனத்தை அக்கு வேர் ஆணி வேரென தனியாக தனியாக பிரித்து விற்றாலும், எந்த பாகம் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் மைக்ரோ டாட் தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. திருடப்படும் வாகனங்களைக் கண்டுபிடிக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்திற்கு இந்தய அரசு அனுமதி அளித்துள்ளது.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இந்தியாவில் வாகன திருட்டு என்பது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்துவருகிறது. இதனைத் தடுக்க முடியமால் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த சூழலில், வாகனத் திருட்டைத் தவிர்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சில நொடிகளில் தகர்த்தெறிந்து, வாகனத்தைக் கொள்ளையடிக்கும் திருடர்கள் ஊருக்குள் வளம் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இதுபோன்று அவலத்தைத் தவிர்க்கும் விதமாக தற்போது ஓர் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மைக்ரோ டாட் எனப்படும் புதிய தொழில்நுட்பம் அமலுக்கு வரவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தினால் வாகன திருடர்கள் அதன் துரும்பைக்கூட அசைக்க முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பானது மைக்ரோடாட் தொழில்நுட்பம்.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

மைக்ரோ டாட் தொழில்நுட்பமானது, லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட சிறு சிறு புள்ளிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த புள்ளிகளில் வாகனங்களுக்கான தனிப்பட்ட எண் மற்றும் வாகன அடையாள எண் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த மைக்ரோ லேசர் டாட்களை வாகன கூட்டின் மீது பெயிண்டைப் போன்று ஸ்பிரே செய்யப்படும். அதேபோன்று எஞ்ஜின் உள்ளிட்ட மற்ற பாகங்களிலும் இந்த மைக்ரோ டாட்கள் ஸ்பிரே செய்யப்படும். லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த மைக்ரோ புள்ளிகளை அவ்வளவு எளிதாக நீக்கிவிட முடியாது. மேலும், இந்த டாட்களை அல்ட்ரா வைலட் விளக்கினைக் கொண்டு மட்டுமே காண முடியும்.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இந்த மைக்ரோ டாட்கள் கார் எந்த நிலையில் இருந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க உதவும். அதன்படி, காரின் பாகங்கள் தனிதனியாக பிரித்து கழட்டிப்போட்டிருந்தாலும், எந்த பாகம் எந்த இடத்தில் உள்ளது என்ற தகவலை எளிதில் பெற்றுவிடலாம். இந்த தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் காணமல் போன வாகனங்களை எளிதில் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இந்த தொழில்நுட்பத்தை வாகனங்களில் பயன்படுத்துவது குறித்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களுடான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தற்போது ஆண்டி தெஃப்ட் மைக்ரோ டாட்களை வாகனங்களில் பயன்படுத்தாலம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சிஎம்விஆர்-டிஎஸ்சி என்ற உயர்ந்த உந்தூர்தி தொழில்நுட்ப தகுதிநிலை அமைப்பான மத்திய மோட்டார் வாகன விதிகள் தொழில்நுட்ப நிலைக்குழுவின் அனுமதியினை பெற உள்ளது. மேலும், இதற்கான நார்ம்ஸையும் இந்த அமைப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தயார் செய்ய இருக்கின்றது.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இதுகுறித்த போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதிகாரி கூறியதாவது, "இந்த தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வு கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதில், இந்த மைக்ரோ டாட் தொழில்நுட்பத்தை வாகனங்களில் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிஎம்விஆர்-டிஎஸ்சி நார்ம்ஸின்படி, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இந்த தொழில்நுட்பமானது ஆயிரம் ரூபாயிற்கும் குறைவானது. ஆகையால், ஆரம்பத்தில் ஆப்ஷன் முறையில் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது" என்றார்.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

மைக்ரோ டாட்கள் 0.5மிமீ அளவு கொண்டது. இதில், வாகனம் குறித்த தகவல் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும் அல்லது வாகனத்தின் அடையாள எண் பொருத்தப்பட்டிருக்கும். இது வாகனம் திருடப்பட்டிருக்கும்போது கண்டுபிடிக்க உதவும். இந்த தொழில்நுட்பத்தை தெற்கு ஆப்பிரிக்கா கடந்த 2012ம் ஆண்டு முதலே அமல்படுத்தி வருகிறது. இதனால் ஆயிரம் கணக்கான காணமல் போன கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜிக்கு மத்திய அரசு அனுமதி...!

இந்தியாவில் கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் சுமார் 2.5 கோடி வாகனங்கள் நாடு முழுவதும் விற்பனையாகி உள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக அனைத்து மாநில வாகனங்களைச் சேர்த்தும் 22 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியா ஒரு வாகனத்திற்கான மிகப் பெரிய சந்தையாக இருந்து வருகிறது. இத்தகைய ஒரு நாட்டில் மைக்ரோ டாட் போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடு வரவேற்தக்கது என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Microdots To Make Car Theftproof India. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X