பயணிகள் விமானத்தில் நடுவானில் ஏரிபொருள் நிரப்ப மாட்டார்கள்! ஏன் தெரியுமா?
விமானங்களில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு விமானம் மூலம் எரிபொருளை நிரப்புவதை நாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருப்போம்,வீடியோக்களில் கூட பார்த்திருப்போம். ஆனால் பயணிகள் பயணிக்கும் விமானத்தில் ஏன் இப்படியான நடுவானில் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் இல்லை. அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்
நாம் இதற்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் பொதுவெளிகளில் பல நேரங்களில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு விமானம் வந்து எரிபொருளை நிரப்பி செல்வதை பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் இதற்கு முன்னர் வைரலாக பரவியது. இது சாத்தியமா என்று கேள்வி உங்களுக்கு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம்தான்.

இப்படியாக ராணுவ விமானங்கள் எல்லாம் நடுவானில் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிலையில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானத்தில் இப்படியாக நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தொழில்நுட்பம் என்பது தற்போது செயல்பாட்டில் இல்லை. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் எதுவும் முயற்சி செய்யவும் இல்லை.
இன்றளவும் நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் ஆங்காங்கே எரிபொருளை நிரப்புவதற்காக தரையிறங்கி சில விமான நிலையங்களில் எரிபொருள்களை நிரப்பி மீண்டும் தனது பயணத்தை தொடர்கின்றன. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் ஆப்ஷன் இருந்தால் இந்த பயண நேரத்தை மிச்சம் செய்யலாமே என நமக்கு தோன்றும். ஆனால் இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் செய்வதில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு தான்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தொழில்நுட்பம் என்பது சற்று ஆபத்தான விஷயமாகும். இரு விமானங்களும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு ஒரே மாதிரியான பொசிஷனில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி பயணம் செய்தால் மட்டுமே இந்த நடுவானில் எரிபொருளை நிரப்பும் தொழில்நுட்பம் என்பது சாத்தியமாகிறது.

இதனால் பயணிகள் பயணம் செய்யும் விமானங்களில் இப்படியாக எரிபொருள் நிரப்பும் முயற்சியை செய்வது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சிறு தவறு ஏற்பட்டாலும் கூட எரிபொருளை கொண்டு வரும் விமானமும் எரிபொருளின் நிரப்பிக் கொண்டிருக்கும் விமானமும் வெடித்து சிதற வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆபத்துக்கு இடையில் தான் ராணுவத்தினர் விமானத்தை நடு வானிலேயே பறக்க விட்டு எரிபொருளை ஏற்றுகிறார்கள்.
ராணுவத்தினர் இதை செய்ய முக்கியமான காரணம் யுத்த நேரங்களில் ஒவ்வொரு முறையும் விமானத்தை எரிபொருளை நிரப்புவதற்காக தரையிறக்க முடியாது என்பதால் இப்படியான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து ஆபத்து இருந்தாலும் பரவாயில்லை என இதை செய்ய ராணுவத்தினர் துணிந்து விட்டனர். அதே நேரம் ராணுவத்தினர் பயன்படுத்தும் விமானங்களில் விமானி மட்டுமே இருப்பார் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
விமானம் விபத்தில் சிக்கினால் அவர்கள் உடனடியாக உயிர்த்தபிப்பதற்காக எஜெக்ஷன் பட்டன் இருக்கும் அந்த பட்டனை அழுத்தியதும் அவர்கள் பேராஷூட் உடன் விமானம் வெடித்ததில் இருந்து தப்பி உயிர் பிழைத்து விடுவார்கள். இதனால் விமானம் மட்டுமே பாதிப்புக்குள்ளாகுமே தவிர விமானிக்கு பிரச்சனை இல்லாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் பயணிகளின் பாதுகாப்பை மிக முக்கியமான விஷயமாக கருதுவதால் நடுவானில் அவர்கள் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை தங்கள் விமானங்களில் கொண்டு வர அனுமதிக்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு முறையும் விமானங்கள் தர இயக்கப்பட்டு அங்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications









