ராசியே இல்லாத விமானம்! 2 அப்பாவி உசுரை பலி வாங்கிய மிக்21 போர் விமானம்! அதிர்ஷ்டவசமா விமானி எஸ்கேப் ஆயிட்டாரு!
இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி வரும் மிக உயரிய ரக போர் விமானங்களில் மிக்-21 (MiG-21)ம் ஒன்று. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார். ஆனால், துரதிரஷ்டவசமாக பொது மக்கள் இருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்தும், மிக் 21 விமானம் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியா அதன் முதல் மிக் 21 ரக விமானத்தை 1963 மார்ச் மாதத்திலேயே பெற்றது. ஒட்டுமொத்தமாக 874 யூனிட்டுகள் மிக் 21 போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டன. ஆனால், இப்போது 50க்கும் குறைவாகவே இந்த விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த விமானத்தை ராசி இல்லாத போர் விமானம் என கூறலாம். இவ்வாறு கூற ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அதிகளவில் விபத்தை அது சந்தித்து இருக்கின்றது. இதுவே மிக் 21 விமானத்தை ராசி இல்லா விமானம் என கூற காரணமாக இருக்கின்றது.
இதுவரை 490 விபத்துகளை இந்த விமானம் சந்தித்து இருக்கின்றது. 874இல் 490 விமானங்கள் விபத்தைச் சந்தித்து இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. அதேவேளையில், 170 விமானிகள் இந்த விமானத்தின் விபத்தில் சிக்கி உயரிழந்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே திங்கள் (மே 8) அன்று அதே மிக் 21 ரக போர் விமானம் விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இதில், பொது மக்கள் இருவர் பலியாகி இருக்கின்றனர். இருவரும் பெண்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், ஓர் ஆணும் இந்த விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றார்.
அதேவேளையில், விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார். விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை அறிந்து அவர் விமானத்தில் இருந்து பாராசூட் வாயிலாக வெளியேறி இருக்கின்றார். ஆகையால், அவர் அதிரஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார். இந்த கோர விபத்து ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர்ஹ் எனும் பகுதியிலேயே அரங்கேறி இருக்கின்றது.

இதற்கு முன்பும் இதே மிக் 21 விமானம் சார்ந்து அரங்கேறிய விபத்து சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு வருடத்திற்கு முன்பே இந்த கோரச் சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் சோகம் அடங்கி சில நாட்களே ஆகின்றநிலையில் மற்றுமொரு விபத்தை மிக் 21 சந்தித்து இருக்கின்றது. நான்கு வேரியண்டுகளாக எம்ஐஜி 21 ரக போர் விமானம் விற்பனைக்கு வழங்கப்பட்டது. அனைத்து வேரியண்டுகளும் இந்தியாவில் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட்டன. முதல் வேரியண்ட் மிக்-21பிஎஸ் (டைப் 76) ஆகும்.
1971 இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்த விமானம் முக்கிய பங்கினை ஆற்றியது. இப்போது பயன்பாட்டில் இருப்பது மிக் 21 பைசன் வேரியண்ட் ஆகும். 50 யூனிட்டுகள் அது பயன்பாட்டில் இருக்கின்றது. அவை, எந்த நேரத்திலும் போரை சந்திக்கும் அளவிற்கு திறன் வாய்ந்ததாக இருப்பதாக கூறப்படுகின்றது.
அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் மிக் 21 பைசன் (MiG 21 Bison) வேரிண்ட் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. லேசர் தொழில்நுட்பம் வாயிலாக தாக்கும் திறனை அது கொண்டிருக்கின்றது. மிக நீளமான இலக்கைகூட தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகவும் அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
ராசி இல்லாத விமானமாக இது ஒரு சிலரால் கருதப்பட்டாலும், அதை இந்திய விமானப் படையில் சேர்த்த பின்னரே எதிரி நாடுகள் பல இந்தியாவைக் கண்டு நடுங்கத் தொடங்கின. ஹிந்துஸ்தான் ஏரானாடிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited) எனும் நிறுவனமே மிக் 21 போர் விமானத்தை தயாரித்த நிறுவனம் ஆகும். இதுவே, மிக் 21-ஐ வான் வழி போராட்டத்தை மேற்கொள்ளும் திறன் வாய்ந்த விமானமாக வடிவமைத்தது.
டிரைவ்ஸ்பார்க கருத்து: மிக திறன் வாய்ந்த விமானமான மிக் 21-க்கு இப்போது 40க்கும் அதிகமான வயதாகின்றது. அதிக வயதாகிவிட்ட காரணத்தினாலேயே அது அதிகளவில் விபத்தில் சிக்கி வருவதாக நாங்கள் கருதுகின்றோம். நாட்டின் பாதுகாப்பில் பல ஆண்டுகளாக அது பணியாற்றி வருகின்றது. ஆகையால், அது மிகக் கடுமையாக பலவீனமடைந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
