மிலிட்டரி ஸ்டைல் டிசைனில் உருவாக்கப்பட்ட கார் மாடல்கள்
அனைத்து ரக வாகனங்களும் பயன்பாடுகள், வசதிகளை மனதில் கொண்டு ஒவ்வொரு ரகத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ராணுவ பயன்பாட்டு வாகனங்கள் வடிவமைப்பிலும், எஞ்சின் திறனிலும் வித்தியாசம் காட்டுகின்றன.
அதிக பவர் கொண்ட எஞ்சின், கரடு முரடான சாலைகளிலும் எளிதாக செல்லும் அம்சங்கள் கொண்ட ராணுவ பயன்பாட்டு வாகனங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இதில், சில மாடல்கள் தனி நபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் மாற்றங்களுடன் டிசைன் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. அந்த வகையில், மிலிட்டரி ஸ்டைல் எஸ்யூவி மற்றும் கார் மாடல்கள் சிலவற்றை ஸ்லைடரில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி4
ஜெர்மனியில் பிரபலமான மிலிட்டரி ஸ்டைல் கார் இது. இரண்டாம் உலகப் போரின்போது அடாஃல்ப் ஹிட்லர் இதுபோன்று மல்டி ஆக்சில் பென்ஸ் காரை பயன்படுத்தியுள்ளார்.

ஜீப் ரேங்லர்
அனைத்து சாலைநிலைகளுக்கும் ஏற்ற ஜீப் மாடல்தான் ஜீப் பிராண்டின் ரேங்லர். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜிஎல்எஸ் வாகனத்தின் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில்
ஃபோக்ஸ்வேகன் பீட்டிலும் ஜெர்மனி ராணுவ அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்தான்.

லேண்ட்ரோவர்
லேண்ட்ரோவர் எஸ்யூவி கார்களும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற தகவமைப்புகள் கொண்டவையாக இருக்கின்றன. தனிநபர் பயன்பாட்டிலும் சிறந்த ஆஃப் ரோடிங் வாகனங்களாக விளங்குகின்றன.

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு துறையில் அதிக அளவில் லேண்ட்க்ரூஸர் எஸ்யூவிகள் விரும்பப்படுகிறது. ஈராக்கிலும் லேண்ட்க்ரூஸர் ராணுவ பயன்பாட்டில் இருக்கிறது.

மினி மோக்
கோல்ப் கார் மற்றும் ஜீப்பை அடிப்படையாக கொண்ட கிராஸ்ஓவர்தான் மினி மோக். இதுவும் ராணுவ பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால், தற்சமயம் உற்பத்தியில் இல்லை.

ஸ்டெர் புச்-கீலேண்ட்வேகன்
இதுவும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற கார். இந்த காரின் இன்டிரியரும், லெதர் இருக்கைகளும் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.

ஹம்மர் எச்1
இதுவும் ராணுவ பயன்பாட்டில் இருந்த எஸ்யூவி. உற்பத்தி நிறுத்தப்பட்ட மாடல். தற்போது நட்சத்திரங்கள் பலரிடம் இதன் மேம்படுத்தப்பட்ட தனிநபர் பயன்பாட்டுக்கான மாடல்கள் இருக்கின்றன.

கான்கொஸ்ட் நைட்எக்ஸ்வி
கான்கொஸ்ட் நைட் எக்ஸ்வி கனடா நாட்டு ராணுவ பயன்பாட்டு வாகனம். தற்போது தனிநபருக்கு ஏற்ற மாடல்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








