2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷன் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

கேரளாவை சேர்ந்த ராகேஷ் பாபு என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இணையத்தில் பிரபலமானார். மிகவும் புகழ்பெற்ற ஃபோக்ஸ்வேகன் பீட்லி (VW Beetle) காரின் மினியேச்சர் வெர்ஷனை அவர் உருவாக்கியிருந்ததே இதற்கு காரணம். அவர் உருவாக்கிய ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினி வெர்ஷன், இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷனை உருவாக்கியது எப்படி? அதில் என்னென்ன பாகங்கள் இடம்பெற்றுள்ளன? என்பது தொடர்பாக ஒரு சில காணொளிகளை ராகேஷ் பாபு வெளியிட்டார். வாகன ஆர்வலர்கள் மத்தியில், இந்த காணொளிகளுக்கு சமூக வலை தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

இந்த சூழலில் ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷனை உருவாக்கிய ராகேஷ் பாபு சமீபத்தில் மேலும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். Sudus Custome என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. காருக்கு ஊற்றுவதற்காக ஒரு பாட்டில் பெட்ரோலுடன் ராகேஷ் பாபு நின்று கொண்டிருப்பதை காட்டுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

இது ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷன் இன்னமும் இயங்க கூடிய நிலையில் உள்ளதா? என்பதை சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காணொளி ஆகும். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராகேஷ் பாபு இந்த மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரை இயக்கியுள்ளார். அப்போது அதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

பொதுவாக வழக்கமான கார்களில் எரிபொருள் டேங்க் மூடி பக்கவாட்டில் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மேற்கூரையில் எரிபொருள் டேங்க் மூடி இடம்பெற்றுள்ளது. இந்த காரின் எரிபொருள் டேங்க் 4 லிட்டர் கொள்ளவு கொண்டது. இந்த காரின் பாகங்கள் பற்றியும் இந்த காணொளியில் ராகேஷ் பாபு விளக்கி கூறியுள்ளார்.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

இந்த காரின் ஹெட்லைட்கள், பஜாஜ் ஆட்டோ ரிக்ஸாவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரில் 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சுஸுகி சாமுராயில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்டை ராகேஷ் பாபுவே உருவாக்கியுள்ளார். இது மினி கார் என்பதால், இரண்டு பேர் மட்டுமே அமர முடியும்.

2 பேர் பயணிக்கலாம்... நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப்பட்ட மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி... வீடியோ!

இதற்கிடையே பெட்ரோலை நிரப்பிய பிறகு செல்ஃப் ஸ்டார்ட் மூலம் காரை ஸ்டார்ட் செய்ய ராகேஷ் பாபு முயன்றார். ஆனால் கார் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நின்று கொண்டிருந்ததால், செல்ஃப் ஸ்டார்ட் சரியாக வேலை செய்யவில்லை. எனவே அதன்பின் கிக்ஸ்டார்ட்டை பயன்படுத்தி, ராகேஷ் பாபு காரை ஸ்டார்ட் செய்தார்.

வழக்கமான கார்களை போல் இந்த மினி ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரிலும் ஆக்ஸலரேட்டர், பிரேக் மற்றும் க்ளட்ச் பெடல்களும், கியர் லிவரும் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த கார் அருமையாக உள்ளது. ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷனை உருவாக்கிய ராகேஷ் பாபுவை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Miniature Version Of Volkswagen Beetle - Details. Read in Tamil
Story first published: Thursday, December 17, 2020, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X