ரயில்வே ஸ்டேஷனுக்குள் திடீரென புகுந்த கார்! உள்ளே இருந்து இறங்கியது அவரா! முதலமைச்சரே இதை பண்ண யோசிப்பாரு!
கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஓடி சென்று ரயிலை பிடிக்கும் வழக்கம் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது. சாதாரண மனிதர்களால் ரயிலை பிடிக்க பிளாட்பார்மில் ஓடி செல்ல மட்டுமே முடியும். ஆனால் அமைச்சர் ஒருவர் தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில அமைச்சராக இருந்து வருபவர் தரம்பால் சிங். இவருக்கு உத்தர பிரதேச அரசு சார்பில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ ரயில்வே ஸ்டேஷனின் ஒரு பிளாட்பார்மிற்கு, இந்த காரிலேயே சென்று தரம்பால் சிங் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ரயிலுக்கு நேரம் ஆகி விட்ட காரணத்தால், அமைச்சர் தரம்பால் சிங் காரிலேயே பிளாட்பார்மிற்குள் நுழைந்துள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதில், அமைச்சர் தரம்பால் சிங்கின் அதிகாரப்பூர்வ டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், லக்னோ ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைவதை நம்மால் பார்க்க முடிகிறது. மாற்றுத்திறனாளிகளின் வீல்-சேர்களை பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சரிவுப்பாதையை பயன்படுத்தி, அவரது டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென கார் உள்ளே வந்த காரணத்தால், அங்கு இருந்த பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அமைச்சரின் இந்த செயல், பயணிகளுக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இதற்காக அமைச்சர் தரம்பால் சிங் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களால் இப்படி பிளாட்பார்மில் காரை ஓட்டி கொண்டு செல்ல முடியுமா? என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி ஓட்டி சென்றால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவார்களா? என்பதும் அவர்களின் ஆதங்கமாக உள்ளது.
ஒருவேளை சாமனிய மனிதர் ஒருவர் இதை செய்திருந்தால், அவர் மீது அபராதம் உள்பட சட்ட ரீதியில் மிக கடுமையான நடவடிக்கைகள் பாய்ந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம். எனவே அமைச்சர் தரம்பால் சிங் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும்போது, வீட்டில் இருந்து சற்று முன் கூட்டியே புறப்பட வேண்டும். ரயில் மற்றும் விமானங்கள், யாருக்காகவும் காத்திருக்காது. நாம்தான் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும். எனவே முன் கூட்டியே புறப்படுவதுதான் சரியாக இருக்கும்.
செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல், வாகனம் பழுது போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதையெல்லாம் முன் கூட்டியே கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும். அப்போதுதான் கடைசி நேர அவசரங்களை தவிர்க்க முடியும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
இந்தியாவில் ரயில்வே பிளாட்பார்மில் கார் ஓட்டி செல்லப்பட்டிருப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இவை தவிர்க்கப்பட வேண்டும். பயணிகள் நெரிசல் மிகுந்த மற்றும் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள பிளாட்பார்ம்களில் கார் போன்ற வாகனங்களை ஓட்டுவது பாதுகாப்பானது அல்ல.


Click it and Unblock the Notifications








