டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

டோல்கேட் டிராபிக் ஜாமில் 15 நிமிடமாக சிக்கி கொண்ட அமைச்சர், வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

By Arun

டோல்கேட் டிராபிக் ஜாமில் 15 நிமிடமாக சிக்கி கொண்ட அமைச்சர், வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் அமைச்சர் போன்ற விஐபிக்கள், இதுபோன்று பட்டால்தான் சாமானியர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்வார்கள் போல. இதுகுறித்த விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று டோல்கேட்களில் நடைபெறும் கட்டண கொள்ளை. எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல், டோல்கேட்களில் மிக அதிக அளவிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

2வது காரணம், நீண்ட க்யூ. டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி செல்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கம். அதுவும் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் சிக்கி கொண்டால், அவ்வளவுதான்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

வேண்டா வெறுப்பாக செலுத்தும் கட்டணத்தை கூட கொடுத்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கட்டணத்தை செலுத்தி விட்டு, டோல்கேட்டை கடக்க நீண்ட நேரம் பிடிக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதன் மூலம் மிச்சம்பிடிக்கப்பட்ட அத்தனை நேரத்தையும் இழக்க நேரிடுகிறது.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

இதனிடையே ஹரியானா மாநில அமைச்சராக உள்ள விபுல் கோயல் என்பவர், டோல்கேட்டில் ஏற்பட்ட அத்தகைய டிராபிக் ஜாமில், சுமார் 15 நிமிடங்கள் சிக்கி கொண்டார். இதனால் அவர் செய்த காரியம், வாகன ஓட்டிகளிடம் இருந்து அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மனோகர் லால் கட்டார் முதல் அமைச்சராக உள்ளார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்தான் விபுல் கோயல். அங்குள்ள பத்ராபூர் டோல்கேட்டில் ஏற்பட்ட டிராபிக் ஜாமில்தான் விபுல் கோயல் சிக்கி கொண்டார்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

அமைச்சர் விபுல் கோயல் வந்த சமயத்தில், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னையாக டிராபிக் ஜாம் உள்ளது.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

இதனிடையே டிராபிக் ஜாம் சம்பவத்தால் வெறுத்து போன அமைச்சர் விபுல் கோயல், தனது காரில் இருந்து இறங்கி விட்டார். அம்மாநில போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு பாதுகாப்பாக வந்திருந்தன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி விறுவிறுவென டோல்கேட்டை நோக்கி அவர் நடந்து சென்றார்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

பின்னர் டோல்கேட்டின் ஒவ்வொரு கண்ட்ரோல் அறை முன்பாகவும் இருந்த பூம் பேரியர்களை திறந்து விட அமைச்சர் விபுல் கோயல் உத்தரவிட்டார். இதனால் நீண்ட நேரமாக நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும், கட்டணம் செலுத்தாமல் இலவசமாக டோல்கேட்டை கடந்து சென்றன.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

டிராபிக் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் விபுல் கோயல் இதனை செய்தார். அத்துடன் அங்கு சிறிது நேரம் நின்று, வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடந்து செல்வதையும் அவர் பார்த்து கொண்டிருந்தார்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

பொதுவாக அமைச்சர்கள் மற்றும் விஐபிக்களுக்கு டோல்கேட்களில் ஸ்பெஷல் லேன் வழங்கப்படும். அத்தகைய நபர்களின் கான்வாய் கட்டணம் எதுவும் செலுத்தாமல், ஸ்பெஷல் லேன் மூலமாக டோல்கேட்டை கடந்து செல்லலாம்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

ஆனால் பத்ராபூர் டோல்கேட் சிஸ்டமில் எதிர்பாராதவிதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சரிடம், டோல்கேட் ஊழியர் அதை விவரிக்கவும் செய்கிறார். இதனால்தான் அமைச்சரும் கூட டிராபிக் ஜாமில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

ஆனால் எவ்வளவு நேரம், அப்படி வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எது எப்படியோ, அந்த சமயத்தில் டோல்கேட்டை கடந்த வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அந்த வீடியோவை கீழே காணலாம்.

எனினும் அமைச்சர்கள் போன்ற விஐபிக்களுக்கு, இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான், சாமானிய மக்களின் வலி புரியும் போல. அமைச்சர் விபுல் கோயலும் கூட, நேரடியாக பாதிக்கப்பட்டதால்தான், வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல உத்தரவிட்டார்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

இந்த சமயத்தில் டோல்கேட்கள் தொடர்பான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை கடந்து சென்று விட்டால், இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலர் பேசி கொள்கின்றனர்.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

ஆனால் அப்படியான விதி எதுவும் இல்லை. அது வெறும் புரளிதான். கார்களுக்கு இலவச அனுமதி வழங்க சட்ட புத்தகத்தில் இடம் இல்லை என்பதை அரசு ஏஜென்சிகளான MORTH (Ministry for Road Transport and Highways), NHAI (National Highway Authority of India) ஆகியவை உறுதிபடுத்தியுள்ளன.

டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...

இதனிடையே டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில், பாஸ்ட் டேக் முறை நாடு முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Article Published On: Tuesday, June 5, 2018, 15:54 [IST]
English summary
Minister gets stuck in toll booth traffic jam; Orders FREE passage for all vehicles [Video]. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+