இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவி வகித்து வந்தார். நிதின் கட்கரியின் கீழ் செயல்பட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூட்டணி அதிக ஆர்வம் காட்டியது. தரமான சாலைகள் விரைவான போக்குவரத்திற்கு உதவி செய்வதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இதனை மனதில் நிறுத்தி கொண்டுதான், சாலை பணிகளை அவர்கள் வேகப்படுத்தினர். ஆனால் ஒரு சில இடங்களில் இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பவே செய்தது. நெடுஞ்சாலைகளை அமைக்கிறேன் என்ற பெயரில் மரங்கள் வெட்டி வீசப்பட்டு, பசுமை அழிக்கப்படுவதாக புகார்கள் முன் வைக்கப்பட்டன.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

குறிப்பாக சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு இதற்கு ஒரு உதாரணம். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாத மோடி தலைமையிலான முந்தைய அரசு, நாள் ஒன்றுக்கு 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை அமைத்தது.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அமோக வெற்றியை சுவைத்துள்ளது. நரேந்திர மோடியே தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

அவரது முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வரிசையில் நிதின் கட்கரிக்கும் மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

ஆனால் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையிலும் நிதின் கட்கரிக்கு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே துறையின் அமைச்சராகியுள்ள நிதின் கட்கரி பல்வேறு இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இதுகுறித்து நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எனக்கு சாலை போக்குவரத்து துறைக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை சாலை ஓரங்களில் 125 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மரக்கன்றுகள் நடப்படும்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இதுதவிர சாலை ஓரங்களில் புதிய வசதிகளை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்துவது குறித்தும் சிந்தித்து வருகிறேன். இந்த வகையில் 2,000 வசதிகள் ஏற்படுத்தப்படும். மும்பை-டெல்லி எக்ஸ்பிரஸ் வே சாலையில் பணிகள் தொடங்கி விட்டன.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

அத்துடன் 12 எக்ஸ்பிரஸ் வே திட்ட பணிகள் அடுத்த மூன்று மாத காலத்திற்குள்ளாக நிறைவு செய்யப்படும்'' என்றார். முன்னதாக முந்தைய அரசு ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தோம்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

ஆனால் இம்முறை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

இந்தியாவில் சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப சாலை வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்றாகவே உள்ளது.

இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...

அந்த வகையில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைப்போம் என்ற அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பு வரவேற்க கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் அமைச்சர் கூறியபடி 125 கோடி மரங்களை நடுவதும் அவசியமானதுதான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Minister Nitin Gadakri Plans to Build 40 Km Road Everyday. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X