வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இந்தியாவில் சாலைகள் அனைத்திலும் அதிகப்பட்சமாக செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகளை தலா 20kmph அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இந்தியாவில் வாகனங்களில் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அதிகப்பட்ச வேக வரம்புகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு தான் என்றாலும், நம் நாட்டில் கூறப்பட்டிருக்கும் வேகத்தில் அல்லது அதற்குள்ளாக சரியாக பயணிப்பவர்கள் மிக சிலரே.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

குறிப்பாக நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் நடப்பட்டிருக்கும் வேக பலகைகளை கவனிப்பவர்கள் வெகு சிலர் மட்டுமே. இருப்பினும் அனைத்து விதமான சாலைகளிலும் வாகன ஓட்டிகளை தற்சமயம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்தை காட்டிலும் 20kmph கூடுதல் வேகமாக செல்ல அனுமதிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இந்த முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இதுகுறித்து சமீபத்தில் அமைச்சக அதிகாரிகளுடன் நிதின் கட்கரி மேற்கொண்ட மறுஆய்வு கூட்டத்தின் போது இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் வேக வரம்புகளுக்கு ஒரு சீரான தன்மையை கொடுக்கும்படியும் அமைச்சர் அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளார்.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

தற்சமயம் கார்கள் நெஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலை எனப்படும் விரைவுசாலைகளில் 120kmph வேகத்திலும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம் மாநில போலீஸார் மற்றும் மற்ற மாநில அதிகாரிகள் தங்களது பகுதிகளில் உள்ள சாலைகளில் இயங்குவதற்கான வேக வரம்பை நிர்ணயிக்கின்றனர்.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இதனால் தான் மாநிலங்களுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்குவதற்கான அதிகப்பட்ச வேகம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுப்படுகிறது. நகரத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் 40kmph வேகத்திற்கு மேல் சென்ற வாகன ஓட்டிகள் கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தினால் அபராதத்தை செலுத்தினார்கள்.

வாகனங்களுக்கான வேக வரம்பை 20kmph அதிகரியுங்கள்!! அதிகாரிகளை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்

இது வைரலானதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். இருப்பினும் சாலை விபத்துகளை குறைக்க வேக வரம்புகளை கடுமையாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Minister Nitin Gadkari wants to raise speed limits by 20km/h.
Story first published: Thursday, July 15, 2021, 22:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X