வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான வாகனங்களின் உயர் வேகத்தை பரிசோதிக்கும் டிராக்!

ஆசியாவின் மிக நீளமான அதி-வேக வாகன பரிசோதனை டிராக் இந்தியாவின் இந்தூர் பகுதியில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

ஆசியாவின் மிக நீளமான வாகனங்களின் உயர் வேகத்தை பரிசோதனைச் செய்யும் டிராக் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஒன்றிய அரசின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்திருக்கின்றார்.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

இது 11.3 கிமீ நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நட்ராக்ஸ் எனும் பெயர் கொண்ட இந்த டிராக் உலக தர வாய்ந்ததாகும். இந்தூரின் பிதம்பூர் பகுதியில் இந்த டிராக் அமைந்திருக்கின்றது. பதினாறு மீட்டல் அகலம் கொண்ட இந்த டிராக்கில் 4 லேன்கள் அமைந்திருக்கின்றன.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

இத்தகைய அளவைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஆசியாவின் முதலானதாகவும், உலகின் ஐந்தாவது மிக நீளமான டிராக்காகவும் நட்ராக்ஸ் அமைந்திருக்கின்றது. இது இந்தியாவின் பெறுமை ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கின்றார்.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

பிரத்யேகமாக வாகனங்களின் உச்சபட்ச வேகத்தை ஆய்வும் செய்வதற்காக இந்த டிராக் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, இது வாகனங்களை மதிப்பீடு செய்யவும் இந்த டிராக் உதவ இருக்கின்றது.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

முன்னதாக இதுபோன்று தரவுகளை ஆய்வு செய்ய வெளிநாடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றநிலை இருந்தநிலையில் தற்போது இந்தியாவிலேயே நடராக்ஸ் டிராக் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

அதிகபட்சமாக 375 கிமீ வேகத்தில் கார்களை இயக்கும் வகையில் டிராக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த டிராக் 2,960 ஏக்கர் நில பரப்பில் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். வரம்பற்ற உச்சபட்ச வேகத்தை பரிசோதிக்கும் வகையில் இதன் சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

குறிப்பாக, உயர் வேகம், ஆக்சலரேஷன் திறன், கோஸ்ட் டவுன், எரிபொருள் செலவு, உயர் வேகத்தின் கட்டுபாடு மற்றும் ஸ்டெபிளிட்டி ஆகியவற்றை ஆய்வுச் செய்ய இந்த டிராக் உதவும். இதுமட்டுமின்றி சில வர்த்தக பயன்பாட்டிற்கும் இந்த டிராக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரலாறு மாறபோகுது... இந்தியாவில் அமைகிறது ஆசியாவின் மிக நீளமான உயர்-வேக வாகன பரிசோதனை டிராக்!

புதிய தயாரிப்பு அறிமுகம், சூப்பர் கார் பந்தய மற்றும் விற்பனையாளர்களின் நிகழ்வு ஆகியவற்றிற்கு இந்த டிராக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய நட்ராக்ஸ் டிராக்கை பயன்படுத்திக் கொள்ள பியுஜியோட், லம்போர்கினி, ஃபோக்ஸ்வேகன், எஃப்சிஏ (ஸ்டெல்லன்டிஸ்) மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக டிராக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Union Minister Prakash Javdekar Virtually Inaugurated Asia's Longest High-Speed Test Track At Pithampur. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X