பீச் மணலில் சிக்கி கொண்ட காரை மீட்டது இவரா! அவ்ளோ பெரிய ஆளுக்கு எவ்ளோ நல்ல மனசு பாருங்க! வாயை பிளந்த மக்கள்!

கடற்கரை மணலில் கார்களை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதை உணராமல், பலரும் கடற்கரை மணலில் கார்களை ஓட்டுகின்றனர். குறிப்பாக எஸ்யூவி (SUV) ரக கார்கள் என்றால், கடற்கரையை பார்த்ததும் அதன் டிரைவர்கள் மிகவும் உற்சாகமாகி விடுகின்றனர். ஆனால் கடற்கரை மணலில், டயர் சிக்கி கொள்ளும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

கடற்கரை மணலில் கார்கள் சிக்கி கொண்ட சம்பவங்களின் வீடியோக்கள் (Videos), கடந்த காலங்களில் பலமுறை வெளியாகியுள்ளன. குறிப்பாக 2 வீல் டிரைவ் கார்கள்தான், கடற்கரை மணலில் அதிகமாக சிக்கி கொள்கின்றன. எனவே கடற்கரைகளில் கார் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Kerala Minister Recovers Car Stuck On Beach

இந்த சூழலில் கடற்கரை மணலில் சிக்கி கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஒன்றை, பிரபலமான மனிதர் ஒருவர் மீட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள மாநில இளைஞர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் சின்டா ஜெரோம். இவர் கேரள அரசுக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகிறார். கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்காக சமீபத்தில் அதாலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சின்டா ஜெரோம் வந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டயர்கள் கடற்கரை மணலில் சிக்கி கொண்டன. பொதுவாக கடற்கரை மணலில் சிக்கி கொண்ட கார்கள், மீட்பு வாகனங்கள் மூலமாகதான் மீட்கப்படும். ஆனால் சின்டா ஜெரோமின் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை மீட்பு வாகனம் இல்லாமல் அமைச்சர் ஒருவர் மீட்டுள்ளார்.

முதலில் இந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை மீட்பதற்கு, அதன் டிரைவர் தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது கடலோர மக்களுக்கான அதாலத் என்பதால், கேரள மாநிலத்தின் மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சரான சாஜி செரியன் அங்கு வந்திருந்தார்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் கடற்கரை மணலில் சிக்கி கொண்டிருப்பதை பார்த்ததும், அவர் உதவி செய்யலாம் என முடிவு செய்தார். உடனடியாக டிரைவர் இருக்கையில் அமர்ந்து, காரை வெளியே எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். இந்த பணிகளில் காவல் துறையினரும் ஈடுபட்டனர்.

அவர்கள் வெளியில் இருந்து காரை தள்ள, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் சாஜி செரியன் சாதுர்யமாக செயல்பட்டு, சற்று நேரத்தில் காரை வெளியே எடுத்து விட்டார். சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரல் (Viral Video) ஆக பரவி வருகிறது. அதனை நீங்கள் இந்த செய்தியின் முடிவில் பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமைச்சர் சாஜி செரியன், கார் ஓட்டுவதில் நல்ல அனுபவம் உடையவரை போல் தெரிகிறது. அத்துடன் இந்த சம்பவம் நடந்த பகுதியிலும் அவருக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருக்க கூடும். எனவேதான் அவரால் காரை, கடற்கரை மணலில் இருந்து மிக எளிதாக மீட்க முடிந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 17:21 [IST]
English summary
Minister recovers toyota innova crysta stuck on beach viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+