சட்டசபையே ஆடிப்போச்சு! அமைச்சர் மகன் ரோட்ல இப்படி ஒரு காரியத்தையா பண்ணாரு?

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்குமார் ஹோரே, இவர் சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றில் சிக்கினார். இந்த பிரச்சனை தீர்வதற்குள் இவருக்கு அடுத்த தலைவலி துவங்கியுள்ளது. இவரது மகன் ஆதித்யராஜ் கோரே சமீபத்தில் வாங்கிய புதிய பைக்கில் பொது சாலையில் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்ன பைக்கை வாங்கினார். இது ஏன் சர்ச்சையானது? முழுமையான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஜெய்குமார் ஹோரேவின் மகன் ஆதித்யரான் ஹோரோ இவர் சமீபத்தில் டுகாட்டி நிறுவனத்தின் பேனிகேல் வி4எஸ் என்ற பைக்கை வாங்கினார். இந்த பைக்கை அவர் வாங்கிய உடன் ஆர்வத்தில் அதை வேகமாக ஓட்ட வேண்டும் என்ற கருதி சாதாரா கோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டினார். இந்த வாகனத்தில் அவர் ஸ்டண்ட் செய்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது.

Minister Son Bike Stunt Video

இந்த வீடியோவின் படி இந்த வாகனத்தில் நம்பர் பிளேட்டே இல்லாமல் இருக்கிறது. அது போக இந்த பைக்கை ஒருவர் வேமாக ஓட்டி செல்லும் போது அருகில் காரில் அதே அளவிற்கு வேகமாக சென்றவர்கள் இதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வடியோ தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவின்படி ஸ்டண்ட் காட்சியில் ஈடுபட்டவர் சிறப்பாக பைக்கை கையாண்டார். இருந்தாலும் இதை பொது சாலையில் செய்தது தவறு.

இப்படியாக ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்றால் காலியாக உள்ள ரேஸ் டிராக், தனியார் சாலைகள் அல்லதுகாலியாக இருக்கும் ஏர் ஸ்டிரிப் பகுதியில் இதை செய்யலாம். பொது சாலைகளில் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த வீடியோவை பார்த்த சிலர் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியது, சாலையில் பாதுகாப்பில்லாமல் வாகனத்தில் ஸ்டண்ட் செயலில் ஈடுபட்டதற்காக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த சர்ச்சை தற்போது மகாராஷ்டிரா மாநில சட்டசபை வரை எதிரொலித்துள்ளது.

Minister Son Bike Stunt Video

இவர் ஓட்டிய டுகாட்டி பேனிகேல் வி4 பைக்கை பொருத்தவரை இந்தியாவில் ரூ29.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகிறது. இதன் டாப் வேரியன்ட் ரூ36.50 லட்சம் ஆகும். இது எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகள் தான். இந்த பைக் இதற்க முந்தையை தலைமுறை பைக்கை விட சற்று ஷார்ப், ஸ்லீக் மற்றும் பவர்ஃபுல் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லைட்டுகள் எல்லாம் எல்இடி லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1103 சிசி வி4 இன்ஜினை பொருத்தியுள்ளார்கள். இது 13500 ஆர்பிஎம்மில் 214 பிஎச்பி பவரை வெளியிடும். அதே நேரம் 11250 ஆர்பிஎம்மில் 120.9 என்எம் டார்க் திறனை வெளியிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் பல்வேறு விதமான ரைடு மோடுகளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Minister Son Bike Stunt Video

இந்த பைக்கில் இரண்டு பக்க ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டுள்ளது. அதில் முன்பக்க ஃபிரேம்40 சதவீதம் குறைவான ஸ்டிஃப்னஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சஸ்பென்ஸனை பெஆரத்தவரை ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் சஸ்பென்சன் பொரத்தப்ப்டடுள்ளது. பிரேக்குகளை பொருத்தவரை பிரெம்போ பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மார்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் விற்பனையாகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொது சாலையில் வாகனம் ஒட்டும் போது கட்டாயம் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுசாலைகளில் அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது ஸ்டண்ட் காட்டுவது சட்டப்பட தவறாகும். இதனால் நீங்கள் இதை முயற்சி செய்யாதீர்கள். மீறினால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 12:05 [IST]
English summary
Minister son bike stunt video on public road goes viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X