56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அமைச்சரின் மனைவி ஒருவர் 56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடியுள்ளார். அதிர்ச்சிகரமான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் விதிமுறைகளை மீறி கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக பல்வேறு புகார்கள் மிக நீண்ட காலமாக உள்ளன. இருந்தபோதும் சாமானிய மக்கள் வேண்டா வெறுப்பாக கட்டணம் செலுத்தி கொண்டுதான் உள்ளனர்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும், சுங்க கட்டணம் செலுத்த மறுத்து, டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகின்றன. அதே பாணியில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

கட்டணம் செலுத்துமாறு கூறிய டோல்கேட் ஊழியர்களை, அரசியல்வாதிகளும், அவரது பாதுகாவலர்களும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததுண்டு. ஆனால் டோல்கேட்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர் போல.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

இதன்மூலமாக டோல்கேட்களில் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது, அமைச்சர் மனைவி ஒருவரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

ஆந்திர பிரதேச மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில், சிவில் சப்ளை அமைச்சராக இருப்பவர் பிரதிபட்டி புல்லா ராவ். இவரது மனைவி வெங்கட குமாரி.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

வெங்கட குமாரியும் அரசியல்வாதிதான். ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் மிகவும் ஆக்டிவ் ஆக அவர் பணியாற்றி கொண்டுள்ளார். இந்த சூழலில் வெங்கட குமாரி சமீபத்தில், ஐதராபாத்தில் இருந்து குண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

தனது பர்சனல் டொயோட்டா பார்ச்சூனர் காரில், வெங்கட குமாரி பயணம் செய்தார். அப்போது வழியில் இருந்த மடுகுலப்பள்ளி டோல்கேட்டில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

ஆனால் வெங்கட குமாரி அதற்கு மறுத்தார். இருந்தபோதும் சுங்க கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என ஊழியர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். அவர் செலுத்த வேண்டிய கட்டணம் 56 ரூபாய்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

ஆனால் வெங்கட குமாரி அதனை செலுத்த மறுத்ததால், அவருக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஒரு ஊழியர், கட்டணம் செலுத்தாமல் நிச்சயமாக இங்கிருந்து கடந்து செல்ல முடியாது என திட்டவட்டமாக வெங்கட குமாரியிடம் கூறினார்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அத்துடன் அமைச்சரின் மனைவி பயணித்த டொயோட்டா பார்ச்சூனர் காரில் ஒட்டப்பட்டிருந்த எம்எல்ஏ ஸ்டிக்கரின் 'வேலிடிட்டி' குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். டோல்கேட் ஊழியரின் கருத்துப்படி, அந்த எம்எல்ஏ ஸ்டிக்கரின் வேலிடிட்டி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதமே காலாவதியாகி விட்டது.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து எம்எல்ஏக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ அந்த காரில் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு பெற முடியும்.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அத்துடன் இந்த விதிவிலக்கு எம்எல்ஏவின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு மட்டுமே பொருந்தும். பயணம் செய்யும் நபரின் அந்தஸ்தை விளக்கும் வகையிலான ஸ்டிக்கர்/முத்திரையை இந்த வாகனங்கள் தாங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

இதனிடையே டோல்கேட் ஊழியர்கள் கெடுபிடி காட்டியதால், அமைச்சரின் மனைவி இறுதியாக கட்டணம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக வி6 நியூஸ் தெலுங்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், ''அமைச்சரின் மனைவி வெங்கட குமாரி, குண்டூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

எனது கணவர் இன்னமும் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவாகதான் உள்ளார். அப்படி இருக்கையில் டோல்கேட் ஊழியர்கள் எப்படி அவரது காருக்கு தடை உண்டாக்க முடியும்?'' என்றார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, May 20, 2019, 12:14 [IST]
English summary
Ministers Wife Refuses To Pay Toll: Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+