ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 6 மாசம் தான் டைம் அதுக்குள்ள இதையெல்லாம் பண்ணீடுங்க!
மத்திய ஹெவி தொழிற்சாலை அமைச்சகம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பார்களுக்கு வானகங்களின் பயன்படுத்தும் பேட்டரிகளை சோதனை செய்யும் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இது குறித்த தெளிவான விரிவான விபரங்களை காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. மத்திய மாநில அரசுகளும் இதை ஊக்குவித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மானியங்களையும் வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதால் காற்று மாசு ஏற்படாது. இதனால் மாசு பெரும் அளவில் குறையும். இதற்காக மத்திய அரசு FAME என்ற திட்டம் மூலம் இந்த மானியங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் ஆங்காங்கே எலெக்ட்ரிக் வாகனங்கள் பல தீப்பிடித்து எரிந்தன. இதனால் சில உயிர்ப் பலி சம்பவமும் நடந்தது. இதனால் மக்கள் பலருக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படத் துவங்கியது. எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் பாதுகாப்பு குறைவானவை என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் வரிசையாக தீ பிடித்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், தீ பிடித்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும் மத்திய அரசு ஒரு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு இந்தியா முழுவதும் நடந்த எலெக்ட்ரிக் வாகன தீப்பிடிப்பு சம்பவங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இறுதியாக இந்த குழு எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகளில் வடிவமைப்பில் உள்ள பிரச்சனைகள் தான். இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்தனர். இதன் அடிப்படியில் அரசு எலெக்டரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். இனிமேல் இதுபோல விபத்து நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் இதை மேலும் உறுதியாக்கும் விதத்தில் மத்திய ஹெவி இன்டஸ்ட்ரீஸ் அமைச்சகம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு பரிசோதனைகளைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இதை வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து எலெக்டரிக் வாகன தயாரிப்பாளர்களும் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிசோதனைகள் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு சம்மந்தப்பட்டதாகும். குறிப்பாக பேட்டரி பேக், பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மற்றும் செல்களில் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பரிசோதனைகளை செய்து வெளியாகும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அரசு அளிக்கும் PLI மானியத்திற்குத் தகுதி பெரும் என அறிவித்துள்ளது. மற்ற வாகனங்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது அதனால் இந்த பரிசோதனைகளைச் செய்யாமல் வரும் 2023 ஏப்ரலுக்குப் பிறகு வாகனங்களை வெளியிட்டால் அதற்கான மானியம் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

புதியதாகக் கொண்டு வரப்பட்ட பரிசோதனையில் செல் லெவலில் 6 பரிசோதனைகள், பேட்டரி மேனேஜ்மெண்ட் லெவலில் 10 பரிசோதனைகள், இறுதியாக பேட்டரி பேக் லெவலில் 5 பரிசோதனைகள் என ஒவ்வொரு பரிசோதனையும் தனித்தனியாக விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளை எல்லாம் மானியங்களைப் பெறுவதற்கான வழியாக இல்லாமல் இதை எல்லாம் கட்டாயம் ஒவ்வொரு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் செய்யும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தமாகக் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பரிசோதனைகள் மூலம் எதிர்காலத்தில் எலெக்டரிக் வாகனங்கள் தீப்பிடிப்பு எரிவது, அதனால் உயிர்ப் பலிகள் ஏற்படுவது குறையும். மக்களுக்கும் எலெக்டரிக் வாகனங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என்பதால் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








