உல்லாச கப்பல் மாதிரியான சொகுசு கார்ல வந்தது அவரோட மனைவியா! விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Maybach S-Class). லக்ஸரி லிமோசின் (Luxury Limousine) ரகத்தை சேர்ந்த இந்த காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், ஷாருக்கான் (Shah Rukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), கியாரா அத்வானி (Kiara Advani) மற்றும் கங்கனா ரனாவத் (Kangana Ranaut) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்த வரிசையில் ஷாகித் கபூரும் (Shahid Kapoor), மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளார்.
இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரிடம் இருப்பது மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்580 (S580) வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.77 கோடி ரூபாயாக இருக்கிறது.

ஆன்-ரோடு விலை (On-road Price) 3.50 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில், ஷாகித் கபூரின் மனைவி மிரா ராஜ்புட் (Mira Rajput) வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், மிரா ராஜ்புட் செல்போனில் பேசி கொண்டே, மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் இருந்து இறங்கி நடந்து செல்வதை நம்மால் காண முடிகிறது. அவர் பயன்படுத்திய மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் எஸ்580 வேரியண்ட்டில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 503 ஹெச்பி பவரையும், 2,000-4,500 ஆர்பிஎம்மில் 700 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் சீறி பாய்ந்து செல்ல கூடிய திறன் வாய்ந்தது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.
இந்த சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்ட மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்580 வேரியண்ட், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேத்தை வெறும் 4.8 வினாடிகளிலேயே எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் நீளம் 5,469 மிமீ ஆகும். இதன் மூலம் பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். அத்துடன் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சம் இல்லாத கார் என்பதால்தான், திரையுலக நட்சத்திரங்கள் பலரும், விலையை பொருட்படுத்தாமல், மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் சொகுசு காரை வாங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும், அவரது மனைவி மிரா ராஜ்புட்டும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர்கள். அவர்களது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி.
மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் தவிர, மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்-க்ளாஸ் (Mercedes Benz GL-Class), போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகிய கார்களையும், ஷாகித் கபூர்-மிரா ராஜ்புட் தம்பதியினர் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








