டிரக்குக்கும் காருக்கும் அடியில் சிக்கிய சூப்பர் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்!
அதிபயங்கர விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் வாகனங்களால் நாடு முழுவதும் உள்ள சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகின்றன. இதனை சீரமைக்க அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையான சவாலைச் சந்தித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வைக் காண்பது என்பது, கடலில் தொலைத்த ஊசியைப் போன்று உள்ளது.

இதுபோன்ற சூழலை தான் தற்போது உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை இருக்க, மறுபுறம் அதனால் உருவாகும் பின்விளைவுகள் என பல்வேறு சிக்கல்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.

அதில், ஒன்று தான் நாளுக்கு அதிகரித்து வரும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளும். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மணி நேரத்துக்கு 34 பேர் என்றும், வருடத்துக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இதில், பெரும்பாலும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவர்களே அதிகமாக உள்ளனர். மேலும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, செல்போனை உபயோகித்தவாறு வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் அடங்கும்.

விபத்தில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக, அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அவர்களது போக்கிலேயே செயல்பட்டு, அசதாரணமாக விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதற்கான பலன்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரமான விபத்து ஒன்றில் இருந்து வாகன சாரதிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த விபத்தின் கோர காட்சியானது, பலரது உயிரை பலி வாங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது விலையுயர்ந்த கூப் ரக காரில் புறப்பட்டுள்ளார். அவர் சென்றுக்கொண்டிருந்த சாலையானது அதிகம் பிஸியானது. இந்த நிலையில் அவருக்கு முன்னால் ஒரு எஸ்யூவி ரக போர்ட் காரும், பின்னால் சரக்கு ஏற்றிச்செல்லும் டிரக் லாரியும் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, சரக்கு லாரியை இயக்கி வந்த ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தைப் போக்குவதுக்காக தேநீர் அருந்தியுள்ளார். அந்த நேரத்தில் முன்னாடிச் சென்றுக்கொண்டிருந்த கூப் கார் திடீரென சாலையில் நின்றுள்ளது. இதைசற்றும் அறியாத டிரக் ஓட்டுநர் கூப் காரின் மீது மோதி வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதில், அப்பளம் போல் நொருங்கிய கூப் கார், இரு வாகனங்களுக்கும் அடியில் சிக்கியது. முன் பகுதி போர்ட் காரின் பின் பகுதியிலும், பின் பகுதி சரக்கு லாரியின் அடியிலும் சிக்கியது. இந்த கடுமையான விபத்தில், எந்தவொரு கோரச் சம்பவமும் அதிர்ஷ்டவசமாக நடைபெறவில்லை.

மேலும், போர்ட் காரில் வந்த ஓட்டுநர் சிறு காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், பயங்கரமான சேதத்தை சந்தித்த கூப் காரின் ஓட்டுநர் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து, ரெஸ்கியூ செய்ய வந்த போலீஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Click it and Unblock the Notifications








