சிஎம் மகனே நெனச்சாலும் இந்த காரை வாங்க முடியாது! ஆனா இந்த நடிகைக்கு கெடச்சிருச்சு! ஊரே ஆச்சரியமா பாக்குது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6). இதன் பேட்மேன் எடிசன் (Batman Edition) மாடலை, மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஒரு லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் ஆகும்.

அதாவது வெறும் 999 பேருக்கு மட்டுமே பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. எனவே முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 135 வினாடிகளிலேயே (2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகள்), 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்து விட்டன.

Mirnalini Ravi

இத்தனைக்கும் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரின் விலை 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல், வெறும் 135 வினாடிகளிலேயே, அனைத்து மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களையும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து விட்டனர்.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் டெலிவரி (Delivery) பணிகள் இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மிகவும் அரிதான இந்த காரை, பிரபல நடிகை ஒருவர் வாங்கியுள்ளார். அவர் மிருணாளினி ரவி (Mirnalini Ravi) ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Mirnalini Ravi Buys Mahindra BE 6 Batman Edition

தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை வாங்கியுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் உடன் தான் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் மிருணாளினி ரவி வெளியிட்டுள்ளார். இதற்காக மிருணாளினி ரவிக்கு சமூக வலை தளங்களில் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரில், 79 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 682 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான ஒரு டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும் (Features), மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 999 பேரிடம் மட்டுமே இருக்கும் என்பதால், சாலையில் தாங்கள் பயணம் செய்யும் கார் வித்தியாசமாக தனித்து தெரிய வேண்டும் என நினைக்க கூடியவர்களுக்கு மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் பேட்மேன் ரசிகர்களுக்கும் கூட, இது நல்ல ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, November 7, 2025, 13:59 [IST]
English summary
Mirnalini ravi buys mahindra be 6 batman edition worth rs 27 79 lakh check all details here
மேலும்... #celebrity cars #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+