2015 மிஸ் ட்யூனிங் காலண்டர்... இருக்குற சூட்ல இதுவேறயா...!!

Posted By:

ஜெர்மனியை சேர்ந்த கார் கஸ்டமைசேஷன் மற்றும் டியூனிங் தொழிற்துறை அமைப்பு வெளியிடும் மிஸ் டியூனிங் காலண்டர் உலக அளவில் பிரபலம். இந்த ஆண்டு காலண்டரை இந்த மாதம் 30ந் தேதி முதல் மே 3ந் தேதி வரை நடைபெற இருக்கும் வேர்ல்டு பாடன்ஸி ட்யூனிங் கண்காட்சியில் பிரபலப்படுத்துவதற்காக மிஸ் ட்யூனிங் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

தங்களது கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்களை பிரபலமாக்கும் விதமாக 'ஹாட்' படங்கள் கொண்ட இந்த காலண்டரை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு இந்த காலண்டர் பரிட்சயம்தான். அந்த வகையில், இந்த ஆண்டு காலண்டரில் இருக்கும் ஹாட் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

அழகி போட்டி

அழகி போட்டி

இந்த காலண்டரில் போஸ் கொடுப்பதற்காக பிரத்யேக அழகி போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்பதற்காக மாடல் அழகிகள் மத்தியில் பேரார்வம் உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அழகி இந்த ஆண்டு காலண்டரை அலங்கரிக்கிறார்.

கடும் போட்டி

கடும் போட்டி

2015ம் ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டருக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் 20 அழகிகள் பங்கெடுத்தனர். அதில், வெரோனிகா முதலிடத்தை பிடித்து, காலண்டருக்கான அழகியானார். இரண்டாவது இடத்தை ஜூலியா ஓம்லரும், விக்டோரியா பிஷர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பரிசு

பரிசு

முதலிடத்தை பிடித்த வெரோனிகா மிஸ் ட்யூனிங் காலண்டரை அலங்கரிப்பது மட்டுமல்ல, அவருக்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் ஸ்பேஸ்பேக் கார் ஒன்றை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அழகி

இந்த ஆண்டு அழகி

வெரோனிகா கிலிமோவிட்ஸ் என்ற அழகிதான் இந்த ஆண்டு மிஸ் டியூனிங் காலண்டர் முழுவதையும் விதவிதமான போஸ்கள் மூலம் அலங்கரிக்கிறார்.

பெர்லின் அழகி

பெர்லின் அழகி

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரை அலங்கரிக்கும் அழகி வெரோனிகா பெர்லின் நகரை சேர்ந்தவர். 25 வயது நிரம்பிய கட்டழகு மாடல். அவரது தொழில்முறை போஸ்களை ஸ்லைடரில் கண்டு களிக்கிறீர்கள்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

கென்ய தலைநகர் நைரோபியில் வைத்து மிஸ் ட்யூனிங் அமைப்பின் பல்வேறு கஸ்டமைஸ் மாடல்கள், வெரோனிகாவை வைத்து இந்த போட்டோஷுட் நடத்தப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு

ஆஃப்ரோடு

வழக்கமாக இல்லாமல் இந்த ஆண்டு ஆஃப்ரோடு பகுதிகளில் வைத்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

போர்ஷே 911

போர்ஷே 911

இந்த ஆண்டு இடம்பெற்றிருக்கும் கார் மாடல்களில் போர்ஷே 911 காரின் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

போட்டோ கிரெடிட்

போட்டோ கிரெடிட்

இந்த புகைப்படங்களை மேக்ஸ் சீம் என்ற பிரபல புகைப்பட நிபுணம் ரொம்பவே மெனக்கெட்டு எடுத்துள்ளார்.

விலைதான்...

விலைதான்...

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மிஸ் ட்யூனிங் நிறுவனத்தின் ஒரு காலண்டருக்கு ஜெர்மனியில் 25 யூரோவும், வெளிநாடுகளுக்கு 30 யூரோவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வித்து போச்சா...

வித்து போச்சா...

அனைத்து காலண்டரும் விற்று விட்டதாக மிஸ் ட்யூனிங் நிறுவன வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, அடுத்த ஆண்டு காலண்டருக்கு இப்போதிலிருந்து கவனமாக பார்த்து மெனக்கெட்டால் மட்டும் கிடைக்கும் போலும்.

காரெல்லாம் எப்படியிருக்குது?

காரெல்லாம் எப்படியிருக்குது?

மிஸ் ட்யூனிங் அமைப்பு கஸ்டமைஸ் செய்த கார்களெல்லாம் எப்படியிருந்தது என்று பார்த்து திருப்தியடைந்தீர்களா... என்னாது ஒரு காரைகூட பார்க்கலையா. அப்ப திரும்பவும், முதல் ஸ்லைடிலிருந்துதான் வர வேண்டும்.

அவ்வளவுதானா...

அவ்வளவுதானா...

போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட படங்கள் இவ்வளவுதானா என்று வந்த வேண்டுகோளுக்கிணங்க இதர மிஸ் ட்யூனிங் காலண்டர் 2015ன் படங்களையும் இணைக்கப்பட்டுள்ளது.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

2015 மிஸ் ட்யூனிங் காலண்டர் படங்கள்

இந்த ஆண்டு மிஸ் ட்யூனிங் காலண்டரில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 2015 Miss Tuning calendar has been shot by ace photographer Max Seam in locations around Nairobi, Kenya. The calendar features some of the most beautiful modified cars along with Veronika.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark