இந்திய ஆணழகன் இவர்தானாம்... மிடில்-கிளாஸ் இளைஞனாக இருந்து இன்று பென்ஸ் காருக்கு ஓனர்!

நடிகராக இருந்து திரைப்பட தயாரிப்பாளராக மாறியவர்கள் ஏராளம். அத்தகையவர்களுள் ஒருவர் தான் ஆகாஷ் சவுத்ரி (Akash Chaudhary) ஆவார். ஒருவர் தயாரிப்பாளராக மாறுகிறார் என்றாலே அவரிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்று அர்த்தம். அதனால், அவரிடம் விலையுயர்ந்த கார்களும் ஏகப்பட்டவை இருக்கும் என உறுதியாக சொல்லலாம். இருப்பினும், ஆகாஷ் சவுத்ரி புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார் ஒன்றை வாங்கியுள்ளார். யார் இந்த ஆகாஷ் சவுத்ரி என்பதையும், அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மெர்சிடிஸ் கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான மெர்சிடிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பென்ஸ் கார்களுக்கு கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர்.

பென்ஸ் கார்கள் மட்டுமின்றி, மேபக் (Maybach) மற்றும் ஏஎம்ஜி (AMG) கார்களும் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றிற்கும் இந்தியாவில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வாறான, மெர்சிடிஸ் கார் கஸ்டமர்களுள் ஒருவராக இணைந்திருக்கும் ஆகாஷ் சவுத்ரி நடிகர், தயாரிப்பாளர் என்பதற்கு முன் இவர் ஒரு ஆணழகன் ஆவார்.

2016இல் நடைபெற்ற இந்திய ஆணழகன் போட்டியில் பட்டத்தை வென்ற ஆகாஷ் சவுத்ரி, அதன் மூலமாக, பாக்ய லஷ்மி டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நம்ம ஊர் பாக்ய லஷ்மி சீரியல் என நினைத்துவிட வேண்டாம்; இது இந்தி பாக்ய லஷ்மி சீரியல் ஆகும். இதற்கு மத்தியில், ஒரு பிரபலமான ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்ட ஆகாஷ் சவுத்ரி, இதற்கிடையில் விளம்பரங்களிலும் தொடர்ச்சியாக காட்சி தர ஆரம்பித்தார்.

இதன் மூலமாக ஈட்டிய பணத்தில் திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்த ஆகாஷ் சவுத்ரியின் வாழ்க்கை அதன் மூலமாக நல்லப்படியாகவே சென்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு சாட்சி தான், அவர் புதியதாக வாங்கியிருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் (C-C-Class) கார் ஆகும். சொல்லப்போனால், இது ஆகாஷ் சவுத்ரியின் 2வது மெர்சிடிஸ் கார் ஆகும். முதல் காரை சில வருடங்களுக்கு முன்னர்தான் வாங்கியிருந்தார்.

இதுகுறித்து இவர் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிட்டுள்ள பதிவில், முதல் விலையுயர்ந்த காரை வாங்கிய போது இதன்பின் மற்றொன்றை எல்லாம் வாங்க முடியாது என நினைத்ததாகவும், ஆனால் 2வது காரையும் குறுகிய காலத்திலேயே வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ள ஆகாஷ் சவுத்ரி, எந்தவொரு காரையும் ஆச்சிரியமாக பார்த்த மிடில்-கிளாஸ் பையன் இன்று இரண்டாவது மெர்சிடிஸ் காரின் சாவியை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சவுத்ரி மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரை அடர் நீல நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த பென்ஸ் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும். சி-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.61.85 லட்சம் - ரூ.69 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னாள் மிஸ்டர் இந்தியா ஆகாஷ் சவுத்ரி வைத்துள்ள மற்றொரு மெர்சிடிஸ் காரும் அடர் நீல நிறத்தில்தான் உள்ளது. இதில் இருந்து இத்தகைய நீல நிறம் அவருக்கு பிடித்த ஒன்று என நினைக்கிறோம். ஆகாஷ் சவுத்ரி தனது இன்ஸ்டா பதிவில் நிறைய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் நாம் கவனிக்க வேண்டியது, தினசரி 9- 5 அலுவலக வேலையை விட்டு தனது கனவை நோக்கி ஓட ஆரம்பித்தேன் என்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 26, 2025, 13:16 [IST]
English summary
Mister india akash chaudhary buys mercedes benz c class luxury car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X