மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசு!

Written By:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

அண்மையில் நடந்த மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடியது. குறிப்பாக, அணித் தலைவர் மிதாலி ராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டி வரை அசத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளும், பரிசுப் பொருட்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் மிதாலி ராஜை கவுரப்படுத்தும் நோக்கிலும், உலகக் கோப்பை போட்டியில் அணியை சிறப்பாக வழி நடத்தியதோடு, சிறப்பாக ஆடியதை பாராட்டும் வகையில், அவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Expert Review Of Tata Nexon - DriveSpark
பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரும், ஹைதராபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவருமான சாமுண்டேஸ்வரநாத் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு காரை மிதாலி ராஜுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

தற்போது 34 வயதாகும் மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அத்துடன், மகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 320d என்ற சொகுசு கார் மாடல் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட் சொகுசு கார் மாடல்.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

இந்த காரில் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு காரின் எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, டியூவல் ஸோன் ஏசி, உயர்தர மியூசிக் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த கார் ரூ.45 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

ஒலிம்பிக்கில் அசத்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரை தொடர்ந்து மிதாலி ராஜும் பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக பெற்றிருக்கிறார்.

பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்ற மிதாலி ராஜ்!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பிறந்த மிதாலி ராஜின் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஹைதராபாத்தில் குடியேறி விட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட குடும்பம் என்பதால், வீட்டில் தமிழில்தான் பேசிக்கொள்வார்களாம். மிதாலி ராஜுக்கும் நன்றாக தமிழ் பேச தெரியும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mithali Raj Gets BMW 320d Luxury Car.
Story first published: Tuesday, August 1, 2017, 17:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark