ஸ்டெபிளைசர் வித்தே இந்த காரை வாங்கிட்டாரா! இவ்ளோ பெரிய மனுசன் ஷோரூமுக்கே வந்து வாங்கிட்டு போயிட்டாரா!!
டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் இந்த மின்சாதனங்கள் இல்லாத வீடுகளைப் பார்ப்பது மிகவும் அரிது. இதேபோல், ஏசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த பொருட்கள் இருக்கும் வீடுகளில் கட்டாயம் ஸ்டெபிளைசர் என்கிற ஓர் சாதனம் இருக்கும். மிக முக்கியமாக அது வி-குவார்டு பிராண்டுடையதாகக் கூட இருக்கலாம். ஸ்டெபிளைசர் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்ற பிராண்டாக வி-குவார்டு இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான பிராண்டாக அது இருக்கின்றது. இந்த பிராண்டின் நிர்வாக இயக்குநரான மிதுன் கே சித்திலப்பில்லி-யே மிகவும் பிரமாண்டமான காரை வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிதுன் கே சித்திலபில்லி வாங்கி இருப்பது லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) கார் மாடல் ஆகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக லக்சூரி அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக காராக இது காட்சியளிக்கின்றது.

இந்த காரையே மிதுன் சித்திலப்பில்லி வாங்கியிருக்கின்றார். இந்த காரை அவர் அவருடைய மனைவியுடன் ஷோரூமுக்கே சென்று டெலிவரி எடுக்கும் காட்சிகளே வெளியாகி உள்ளன. இந்த வீடியோவை லெக்சஸ் கொச்சி ஷோரூம் நிர்வாகமே பகிர்ந்திருக்கின்றது.
கார்கள் மீது அதீத ஈர்ப்பு கொண்டவராக மிதுன் காட்சியளிக்கின்றார். இதன் விளைவாகவே தற்போது அவர் அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் நிறைந்த லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி ரக காரை வாங்கி இருக்கின்றார். இந்த கார் அவரின் பயணங்களை சொகுசானதாக மாற்ற பயன்படுத்தப்பட இருக்கின்றது.

வணிக ரீதியாக அதிக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய நபராக மிதுன் காட்சியளிக்கின்றார். இந்த பயணங்களை சோர்வின்றியும், சுவாராஷ்யமானதாகவும் மாற்றவும் லெக்சஸ் எல்எம் 350எச் பெரும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இதற்கேற்ப ஏகப்பட்ட சொகுசு மற்றும் நவீன கால அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. மடித்துக் கொள்ளக்கூடிய மேஜைகள், சூடாகும் திறன் கொண்ட கை ரெஸ்ட்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள் மற்றும் படிப்பதற்கான லைட்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஒரு சிறிய குளிர்சாதன பெட்டி, டூயல் சன்ரூஃப், எச்விஏசி (HVAC) டச் கன்ட்ரோல்கள், குடை வைப்பதற்கான இடம் மற்றும் 23 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த கார் மாடல் தன்னுள் தாங்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 48 அங்குல அளவிலான பெரிய ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் லெக்சஸ் எல்எம் 350எச் காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரை நான்கு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 4 இருக்கைகள் தேர்வானது முழுக்க முழுக்க ஆடம்பர பயணத்தை விரும்புவோர்களுக்கான தேர்வாகும். இதில் பின்னிருக்கை தனி அறையில் அமர்ந்து பயணிப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். டிரைவருக்கு இடையில் ஓர் தடுப்பு சுவர் போல கண்ணாடி அமைக்கப்பட்டு இருக்கும்.
இதை தேவை என்றால் இறக்கிவிட்டு டிரைவருடன் உரையாடிக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சொகுசு வசதிகளை இந்த நான்கு இருக்கை தேர்வில் பெற்றுக் கொள்ள முடியும். இதைபோலவே அதிக ஆடம்பர வசதிகளைத் தாங்கியதாகவே இதன் 7 இருக்கை தேர்வும் இருக்கிறது.
எஞ்சினைப் பொருத்த வரை லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார், ஹைபிரிட் அம்சத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 239 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இ-சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் இ-4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களும் இந்த கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய எம்பிவி காரே லெக்சஸ் எல்எம் 350எச் ஆகும். இதன் உருவம் சொகுசு படகை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதன் தோற்றம் மட்டுமல்ல அதன் பயன்பாடும் கப்பலுக்கு இணையானதாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








