அல்லு அர்ஜூனே நம்பியிருக்க மாட்டாரு இந்த காரு இப்படி டிரெண்டாகும்னு.. எல்லாரும் தேடி அலைய போறாங்க!
புஷ்பா 2 படத்தை பார்த்தவர்களில் அந்த படத்தை ரசித்தவர்களைவிட, அதில் வந்த காரை ரசித்தவர்களே மிக அதிகம். எந்த காரை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகின்றோம். ஆமாங்க, மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் (Mitsubishi Pajero Sport) காரை பற்றிதான் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம். ஒரு காலத்தில் இந்தியர்களின் ஃபேவரிட் வாகனமாக இருந்து வந்த ஓர் கார் மாடலே இந்த மிட்சுபிஷி பஜெரோ ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.
பிரமாண்ட தோற்றம், உயரமான அமைப்பு மற்றும் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் உள்ளிட்டவிற்கு பெயர்போன காராகவே இது சந்தையில் இருந்தது. இதுமட்டுமில்லைங்க, பணக்காரர்கள் விரும்பும் சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய காராகவும் அது இருந்து வந்தது. இத்தகைய காரையே படத்தில் அதிக அளவில் பயன்படுத்தி அதற்கு பெருமிதம் சேர்த்திருக்கின்றது புஷ்பா 2 படக் குழு.

துரதிரஷ்டவசமாக இந்த கார் இப்போது சந்தையில் விற்பனையில் இல்லை. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மிட்சுபிஷி நிறுவனம் தன்னுடைய இந்த அசத்தலான தயாரிப்பை சந்தையில் இருந்து வெளியேற்றியது. இந்த கார் மாடலை மட்டுமில்லைங்க தன்னுடைய எந்தவொரு தயாரிப்பையும் மிட்சுபிஷி இந்தியாவில் இப்போது விற்பனைக்கு வழங்கவில்லை.
நிறுவனமே இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கின்றது. இருப்பினும் அதன் தயாரிப்புகள் சிலவற்றை கார் ஆர்வலர்கள் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஓர் பஜெரோ கார் மாடலே தற்போது புஷ்பா 2 படத்தில் இன்னும் தரமான அலங்கரிப்பு செய்யப்பட்டநிலையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக படத்திற்காக, புதிதாக வாங்கப்பட்டதை போல அந்த கார் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த கார் சந்தையில் விற்பனையில் இருந்தபோது 7 இருக்கை மற்றும் 5 இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமரும்போது, உயரமான இடத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை வழங்குகின்ற காரணத்திற்காக பலரின் பாராட்டுக்களைகூட இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது.
இதற்கு மட்டுமில்லைங்க அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் பலரின் பாராட்டுக்களை இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இந்த காரில் மிட்சுபிஷி நிறுவனம் 2.4 லிட்டர், 4 சிலிண்டர் என்சினைய பயன்படுத்தியிருந்தது. இது, அதிகபட்சமாக 178 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.
இந்த சிறந்த ஆற்றலுக்கு மட்டுமல்ல பரந்த உட்புறத்திற்கு பெயர்போன கார் மாடலாகவும் இது இருந்திருக்கின்றது. எனவேதான் பெரும் பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளித்தது. ஆனால், பரவலாக பலரின் மனதை இந்த கார் கவர தவறிவிட்டது. ஆனால், புஷ்பா 2 படத்தால் இந்த கார் மீண்டும் டிரெண்டிற்குள் வந்திருக்கின்றது.
விரைவிலேயே இந்த காரை கார் காதலர்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டில் தேட தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இந்த காரை அதிகம் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில்கூட இந்த கார் மாடல் பெரிய அளவில் விற்பனையில் இல்லாத நிலையே தென்படுகின்றது. மேலும், இந்த காருக்கு இந்தியாவில் குறிப்பிட்ட அளவு எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், அக்காரை மிட்சுபிஷி மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போல ஓர் சிறப்பான வரவேற்பு மிட்சுபிஷிக்கு கிடைக்கவில்லை. இதன் விளைவாகவும் இன்னும் சில காரணங்களுக்காகவுமே இந்த நிறுவனம் சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றது. இது மீண்டும் நாட்டில் கால் தடம் பதிக்குமா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications








