சென்னை சாலைகளில் சுற்றிய அந்த காலத்து கார்! டிரைவர் சீட்டை உத்து பாத்ததும் வாயடைத்து போன பொதுமக்கள்!

மு.க. ஸ்டாலின் (M. K. Stalin). தமிழ்நாடு (Tamil Nadu) கடந்து இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்றாக இது தற்போது மாறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் (2024 Lok Sabha Election) நெருங்கி வரும் நிலையில், எதிர்கட்சிகளை (Opposition Parties) ஒருங்கிணைப்பதில் மு.க. ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வருகிறார்.

எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் (INDIA Alliance), மு.க.ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக முக்கியமான பங்கு வகிக்கிறது. திமுக தலைவர் (DMK President), தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் (Chief Minister) என பல முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் மு.க. ஸ்டாலினின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

Fiat 1100

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ ஃபியட் 1100 (Fiat 1100) காரை மு.க. ஸ்டாலின் ஓட்டி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. பொதுவாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரில்தான், மு.க. ஸ்டாலின் பயணம் செய்வார். ஆனால் இந்த வீடியோவில் அவர் ஃபியட் 1100 காரை ஓட்டி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது விண்டேஜ் கார் (Vintage Car) ஆகும். செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார், ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. பருத்திவீரன் (Paruthiveeran) போன்ற படங்களை எப்படி கல்ட் க்ளாசிக் (Cult Classic) என கொண்டாடுகிறோமோ, அதே போன்றதுதான் ஃபியட் 1100 காரும்!

M. K. Stalin Spotted Driving Fiat 1100

ஃபியட் 1100 கார் வைத்திருப்பவர்களை சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்களாக பார்த்த ஒரு காலம் இந்தியாவில் இருந்தது. மு.க. ஸ்டாலின் ஓட்டி சென்றது அவரது சொந்த ஃபியட் 1100 கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பழைய காரை அவர் இன்னமும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த காரில், 1,089 சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 36 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்ட் க்ளாசிக் காரை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை போல் இன்னமும் பலர் சொந்தமாக வைத்துள்ளனர். இதில், பிரபல பாலிவுட் நடிகரும் (Bollywood Actor), அரசியல்வாதியுமான (Politician) தர்மேந்திரா (Dharmendra) மிகவும் முக்கியமானவர். அவரிடமும் ஃபியட் 1100 விண்டேஜ் கார் இருக்கிறது.

மு.க. ஸ்டாலின் மற்றும் தர்மேந்திரா தவிர, மற்றொரு பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் (Jackie Shroff) வசமும் ஃபியட் 1100 கார் இருக்கிறது. பாலிவுட் நடிகரான இவர், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர்தான். பிகில் (Bigil) மற்றும் ஜெயிலர் (Jailer) உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் (Tamil Movies) ஜாக்கி ஷெராஃப்பை நீங்கள் பார்த்திருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னை (Chennai) சாலைகளில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஃபியட் 1100 காரை ஓட்டிய விஷயம், அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து, அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது போன்ற விஷயங்கள், எவ்வளவு விலை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத கடந்த காலத்தின் நினைவுகளுக்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 18:00 [IST]
English summary
Mk stalin spotted driving fiat 1100 vintage car viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+