சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூப்பரான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் காரில் பயணம் செய்யும்போது, கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வரும். அரசியல் தலைவர்களின் கான்வாய் அணிவகுத்து வரும்போது, போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

கான்வாய் வாகனங்கள் கடந்து செல்லும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் வெகு சமீபத்தில் நீதிபதி ஒருவரே இதன் காரணமாக பாதிக்கப்பட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

இதில், தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தால், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது நிறைய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனமும் ஒன்று.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தனது வாகனம் நிறுத்தப்பட்டது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

இதன்பேரில் உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது அவரிடம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ''எதன் அடிப்படையில் 25 நிமிடம் தடுத்து நிறுத்தினீர்கள்? நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்'' எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

இதை தொடர்ந்து நடைபெற்ற சம்பவத்திற்கு உள்துறை செயலாளர் வருத்தம் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது எனவும் அவர் உறுதியளித்தார். இந்த சூழலில், தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின் பேரில், தற்போது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணங்களின்போது, அவருடன் பயணிக்கும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்து வந்தது.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

இந்த எண்ணிக்கை தற்போது வெறும் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் 12 வாகனங்களுக்கு பதிலாக 6 வாகனங்கள் மட்டுமே வரும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணங்களின்போது, பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இந்த முடிவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் நாடு முதல் அமைச்சராக பதவியேற்றது முதலே தனது அதிரடியான அறிவிப்புகள் மூலம் மு.க.ஸ்டாலின் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

அந்த வரிசையில் அவரது இந்த முடிவும் பொதுமக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முடிவு விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!

நாங்கள் ஏற்கனவே தெரிவித்தபடி அரசியல் தலைவர்களின் பயணங்களின்போது, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்து வந்தது. சில சமயங்களில் மணிக்கணக்கில் கூட பொதுமக்கள் காத்திருக்கும் நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில் தமிழ் நாடு முதல் அமைச்சரின் கான்வாயால் பொதுமக்கள் சிரமப்பட மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mk stalin to have fewer vehicles in convoy here is the reason why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X