ஸ்கூட்டர்ல சட்டமன்றத்துக்கு போயிட்டு இருந்த எம்எல்ஏவா இது! விலை உயர்ந்த காரை வாங்க குடும்பத்துடன் ஷோரூமில்!

இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் மிகவும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, மறைமுகமாக மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை பெரும்பாலான அரசியல்வாதிகள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.

அன்டோனியோ வாஸ் (Antonio Vaz) இதற்கு ஒரு உதாரணம். இவர் கோவாவை (Goa) சேர்ந்தவர் ஆவார். கோவா மாநிலத்தின் கோர்ட்டாலிம் (Cortalim) சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக (MLA) அன்டோனியோ வாஸ் பணியாற்றி வருகிறார். இவர் சுயேச்சை எம்எல்ஏ என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

MLA Buys Hyundai Creta King Edition

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க, கோவா மாநில சட்டமன்றத்துக்கு, ஹோண்டா டியோ (Honda Dio) ஸ்கூட்டரில் வந்து, அன்டோனியோ வாஸ் அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணங்களால் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவராக அன்டோனியோ வாஸ் அறியப்படுகிறார்.

இந்த சூழலில், அன்டோனியோ வாஸ் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா காரின் கிங் எடிசன் மாடலை (King Edition), அன்டோனியோ வாஸ் வாங்கியுள்ளார். ஹூண்டாய் க்ரெட்டா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு மாடல்தான் கிங் எடிசன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Hyundai Creta King Edition

ஹூண்டாய் க்ரெட்டா காரின் கிங் எடிசன் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். ஆனால் இதில், எந்த இன்ஜின் ஆப்ஷனை அன்டோனியோ வாஸ் தேர்வு செய்துள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஹூண்டாய் க்ரெட்டா காரின் கிங் எடிசன் மாடலின் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், மேனுவல், சிவிடி, ஆட்டோமேட்டிக் மற்றும் ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் என மொத்தம் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் இந்த காரில், டேஷ்கேம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மெமரி வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை, 18 இன்ச் ட்யூய்-டோன் அலாய் வீல்கள் போன்ற ஏராளமான புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் கிங் எடிசனின் ஆரம்ப விலை 17.89 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20.61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் க்ரெட்டா கருதப்படுகிறது.

இதற்கிடைய அன்டோனியோ வாஸ் தனது குடும்பத்துடன் ஷோரூமிற்கு சென்று, ஹூண்டாய் க்ரெட்டா கிங் எடிசனை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவை, கோவா ஹூண்டாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 15, 2025, 12:17 [IST]
English summary
Mla buys hyundai creta king edition viral video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+