பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்! உள்ளே இருந்தது இவரா! டொயோட்டா ஃபார்ச்சூனரா இருக்க போய் தப்பிச்சுட்டாங்க!
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெய்குமார் கோரே (Jaykumar Gore). இவர் பாரதிய ஜனதா கட்சியை (Bharatiya Janata Party - BJP) சேர்ந்த எம்எல்ஏ (MLA) ஆவார். பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் ஜெய்குமார் கோரே தற்போது சிக்கியுள்ளார். இந்த விபத்து கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது பாஜக எம்எல்ஏ ஜெய்குமார் கோரேவின் சொந்த ஊர் ஆகும். சம்பவத்தன்று ஜெய்குமார் கோரோவின் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்துள்ளது. சுமார் 50 அடி உயரத்தில் கார் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இருந்த பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

எம்எல்ஏ ஜெய்குமார் கோரே உள்பட காரில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். டிரைவரின் தூக்க கலக்கம் காரணமாக, கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் பாலத்தில் இருந்து சுமார் 50 அடி ஆழத்தில் கார் கவிழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்ததும், அங்கிருந்தவர்கள் உடனடியாக உதவிக்கு வந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை அவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். (55)
விபத்தில் காயமடைந்தவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்படங்களை பார்க்கும்போது, விபத்தில் சிக்கிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்திருப்பது தெரிய வருகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கட்டுமான தரம் மிக்க கார் ஆகும். பயணிகள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுவதை தவிர்ப்பதன் மூலம், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.
பகல் நேரத்தில் அவசரம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் பயணம் செய்வதை பலரும் விரும்புகின்றனர். ஆனால் இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, மனித உடல் தூக்க கலக்கத்தில் ஆழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்தவரை இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒரு வேளை இரவு நேரத்தில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நன்மை பயக்கும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இரவு பயணங்களை மேற்கொண்டால் மெதுவாக செல்லுங்கள். சாலையில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தாலும் கூட, அதிவேகத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் வாகனத்தின் முன் பகுதியில் மட்டுமல்லாது, உங்கள் சுற்றுப்புறத்திலும் என்ன நடக்கிறது? என்பதை உன்னிப்பாக கவனித்து கொள்ளுங்கள். ஏனெனில் சாலையின் ஓரங்களில் இருந்து நாய், ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் திடீரென வாகனத்தின் குறுக்கே வரலாம்.
அத்துடன் இரவு பயணங்களின்போது, குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வு எடுத்து கொள்வதும் நல்லது. அவ்வப்போது முகத்தை கழுவி கொள்வதும், சுறுசுறுப்பிற்காக டீ குடிப்பதும் களைப்பை நீக்கும். மேலும் முன் பகுதியில் டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பவருடன் பேசி கொண்டே வருவதும் நல்லது. டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்படாமல் இருக்க இது உதவி செய்யும். ஆனால் பேசி கொண்டிருந்தாலும் கூட, வாகனத்தை ஓட்டுவதில் கவனமாக இருங்கள்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். காராக இருந்தால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிவது, இரு சக்கர வாகனமாக இருந்தால் இருவரும் ஹெல்மெட் அணிவது போன்றவற்றை பழக்கமாக்கி கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக விபத்து நடைபெற்றாலும் தலை மற்றும் உடலில் படுகாயங்கள் ஏற்படுவதை இவை தடுக்கும். அத்துடன் மற்ற வாகன ஓட்டிகளுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்து விடுங்கள். வாகனம் ஓட்டும்போது எப்போதும் ரிலாக்ஸாக இருங்கள்.


Click it and Unblock the Notifications








