மகனின் முக ஜாடை அப்படியே இருக்கு... டாக்டர் பட்டத்துக்கு அப்புறம் எம்எல்ஏ ஆனவர் வாங்கிய பென்ஸ் கார்!

மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனம் உருவாக்கும் கார்களிலேயே விலைமிக்கது மெர்சிடிஸ்-மேபக் (Maybach) கார்கள் ஆகும். மெர்சிடிஸ்-மேபக் கார்களில் இந்தியாவில் மிகவும் பிரபலமானது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 (GLS600) கார் ஆகும். சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேபக் காரை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்த காரை நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் மாதத்திற்கு குறைந்தப்பட்சம் ஒருவராவது இந்த காரை வரிசையாக வாங்கி போட்டனர்.

இத்தகைய காரை தற்போது பிரபல எம்.எல்.ஏ (MLA) ஒருவர் தனது மகனுக்காக வாங்கி உள்ளார். இந்த எம்.எல்.ஏ-இன் பெயர் டாக்டர் வி.எம் தாமஸ் (Dr. VM Thomas) ஆகும். கருவியல் (Embryology) அறிவியலுக்கான முனைவர் பட்டத்தை பெற்ற விஞ்ஞானியாக டாக்டர் விஎம் தாமஸ் விளங்குகிறார்.

andhra mla buys mercedes-maybach car

இத்தகைய சிறப்புமிக்கவர் ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party)-இன் உறுப்பினராக இருந்து, கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரா சட்டசபை தேர்தலில் கங்காதாரா நெல்லூர் (Gangadhara Nellore) தொகுதியில் நின்று வெற்றிப் பெற்று ஆந்திரா எம்எல்ஏ ஆக உள்ளார்.

ஆந்திரா தேர்தலில் அப்போதைய துணை முதலமைச்சர் கே நாராயண சுவாமியின் மகளை எதிர்த்து போட்டியிட்டு விஎம் தாமஸ் வெற்றி பெற்றார். சென்னையில் இவரது கருவுறுதல் மையம் (Fertility Centre) செயல்பட்டு வருகிறது. இத்தகையவர் தற்போது புதியதாக மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை தனது மகனுடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளார்.

andhra mla buys mercedes-maybach car

மகன் ராகுல் தாமஸ் (Rahul Thomas) உடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளதால், இந்த கார் விஎம் தாமஸின் மகனுக்காக வாங்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ராகுல் தாமஸ் புதிய மெர்சிடிஸ்-மேபக் காரை டெலிவிரி பெற்று இருப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள படங்களில் அவரது இளம் வயது நண்பர்களை அதிகமாக பார்க்க முடிகிறது.

தந்தை விஎம் தாமஸ் மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து ஷோரூமில் கேக் வெட்டி உற்சாகமாக ராகுல் தாமஸ் தனது பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள படங்களுள் ஒன்றில் ராகுல் தாமஸ் காரின் மாடர்ன் சாவியை காண்பிப்பதையும் பார்க்க முடிகிறது.

andhra mla buys mercedes-maybach car

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ் கார் ஆனது 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான், ஜிஎல்எஸ்600 ஆகும். மற்றொரு வேரியண்ட், ஜிஎல்எஸ் நைட் சீரிஸ் (Night Series) ஆகும். இதில், எம்எல்ஏ மகன் ராகுல் தாமஸ் வாங்கியிருக்கும் ஜிஎல்எஸ்600 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.39 கோடி ஆகும்.

அதுவே, ஜிஎல்எஸ் நைட் சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது சற்று அதிகமாக ரூ.3.71 கோடியாக உள்ளது. இந்த வேரியண்ட்கள் பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் மட்டுமே கிடைக்கின்றன. டீசல் என்ஜின் (Diesel Engine) உடன் விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்த வகையில், மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காரில் 4 லிட்டர், ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

andhra mla buys mercedes-maybach car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்பதற்கு மட்டுமில்லாமல், ஓட்டுவதற்கும் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 மிகவும் அருமையான கார் ஆகும். இந்த காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய காரை தான் ஆந்திரா எம்.எல்.ஏ விஎம் தாமஸ் தனது இளம் பருவ மகனுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 23:05 [IST]
English summary
Mla vm thomas buys mercedes maybach gls600 for his son
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X