இனி டோல் கேட்ல யாரும் நிக்க வேணாம்! முதல் MLFF டோல்கேட் ரெடி!
இந்தியாவில் முதல் MLFF டோல்கேட்டை குஜராத்தில் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக இந்த சுங்கசாவடி திறக்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஏகப்பட்ட சுங்கசாவடிகள் இருக்கும் நிலையில் இந்த சுங்கசாவடிக்கும் தற்போது திறக்கப்படும் MLFF என்ற சுங்கசாவடிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன்ஙகள் பயணிக்க சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்கசாவடிகளை அமைத்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வாகன ஓட்டிகளிடம் ஃபாஸ்ட்டேக் முறையில் தான் சுங்க கட்டணம் வசூல் என்பது நடக்கிறது.

இந்நிலையில் சுங்கசாவடியில் கார்டை ஸ்கேன் செய்ய ஒவ்வொரு வாகனமும் நிறுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் கடந்து செல்ல முடியும். இது சுங்கசாவடியில் கூட்ட நெரிசலை உருவாக்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில் காத்திருப்பு நேரம் இல்லாமல் சுங்கசாவடியை கடந்து சென்றாலே தானாக சுங்க கட்டணம் கழியும் முறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரபோவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த முறைக்கு தான் தற்போது MLFF அதாவது Multi-Lane Free Flow சுங்க சாவடிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஐசிஐசி ஐ வங்கியிடம் ஒப்பந்தம் செய்து குஜராத் மாநிலம் சோர்யாஸி சுங்கசாவடியை இந்தியாவின் முதல் MLFF சுங்கசாவடியை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சுங்கசாவடியில் வாகனங்களை நிறுத்த தேவையில்லை. வாகனம் கடந்து செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் நவீன கருவிகள் வாகனத்தை கண்டறிந்து அந்த வாகனத்திற்கான சுங்ககட்டணம் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும். இதற்கான சப்போர்ட்களை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. இதை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள காராவுன்டா சுங்கசாவடியில்அடுத்த MLFF சுங்கசாவடிகளை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 25 சுங்கசாவடிகளை இது போல MLFF சுங்கசாவடிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுபடிப்படியாக அனைத்து சுங்கசாவடிகளிலும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிகளில் வாகன பதிவெண்ணை கண்காணிக்கும் அதிக ஃபெர்பார்மென்ஸ் கொண்ட ஆர்எஃப் ஐடி ரீடர், ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் கேமரா, உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதனால் வாகனம் அந்த சுங்கசாவடியில் நிறுத்த வேண்டிய தேவையில்ல. அந்த பகுதியை வேகமாக கடந்து சென்றாலே அந்த கருவிகள் வாகனத்தை கண்டறிந்து அதற்கான சுங்ககட்டணத்தை தற்போது ஃபாஸ்ட்டேக் கார்டிலிருந்து எப்படி எடுக்கிறதோ அதன்படி எடுத்துக்கொள்ளும். இதனால் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும். வாகனத்தின் மைலேஜ் குறையாமல் தடுக்க முடியும். இது மட்டுமல்ல ஸ்மார்ட்டாகவும் வேகமாகவும் பயணத்தை செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடியில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக இருக்கிறது. இதனால் இந்த தொழிற்நுட்பம் மிக முக்கிய தேவையாக இருக்கிறது.இதை இந்தியா முழுவதும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் நிச்சயம் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். நீங்கள் சுங்கசாவடியில் அதிக நேரம் காத்திருந்த அனுபவம் இருந்தால் அதையும் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








