தொழிலாளர்களுக்கு ஓனர் கொடுத்த மிக பெரிய சர்பிரைஸ்... அவர்களது குடும்பம் மொத்தமும் கொண்டாடுது!!

நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விலையுயர்ந்த பைக் & கார்களை நிறுவனத்தின் உரிமையாளர் வழங்குவதை கடந்த சில வருடங்களாக நம் இந்தியாவிலும் அதிகளவில் பார்த்து வருகிறோம். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இத்தகைய நிகழ்வுகளை பரவலாக காண முடியும். இந்த வகையில், மொபைல் போன் கடை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கார் & பைக்குகளைகளை வழங்கி சிறப்பித்துள்ளார். யார் இந்த நபர்? எதற்காக தனது தொழிலாளர்களுக்கு இவ்வாறான ஒரு பரிசை வழங்கி அவர்களை ஆச்சிரியப்படுத்தியுள்ளார்? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

பொதுவாகவே, கேரள மக்கள் பைக், கார்கள் என்றாலே கொஞ்சம் கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். புதியதாக அவர்கள் மேற்கொள்ளும் விஷயங்களில் சிறிதாவது ஆட்டோமொபைல் வாகனங்களின் டச் இருக்கும். அதேபோன்று, மற்றவர்களுக்கு தாங்கள் வழங்கும் பரிசு பொருட்களையும் கார் & பைக்குகளாக வழங்கவே மலையாளிகள் விரும்புகின்றனர்.

mobile phone retailer gifted

அந்த வகையில்தான், கேரளாவில் ஒரு மொபைல் போன் கடை உரிமையாளர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு பைக் & கார்களை பரிசாக வழங்கியுள்ளார். கடினமாக உழைக்கும் பணியாளர்களை ஊக்கமளிக்கும் விதமாக பரிசுகளை வழங்க எந்தவொரு நிறுவனமும் மறந்தது இல்லை. ஆனால், அந்த பரிசுகள் பெரும்பாலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகளாக தான் இருக்கும்.

மிக சில நிறுவனங்கள் மட்டுமே வித்தியாசமாக யோசித்து, வித்தியாசமான பரிசு பொருட்கள் மூலமாக பணியாளர்களை ஆச்சிரியப்படுத்துவது உண்டு. இந்த வகையில், பைக் & கார்களை பணியாளர்களுக்கு வழங்குவது வெளிநாடுகளை தாண்டி, சமீப காலமாக நம் இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது. இந்த வரிசையில், தற்போது கேரளாவில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பைக் & கார்களை வழங்கி இருக்கும் நிறுவனத்தின் பெயர், மை ஜி (MyG) ஆகும்.

mobile phone retailer gifted

நம்ம ஊரில் பூர்விகா, சங்கீதா இருப்பதை போன்று கேரளாவில் மொபைல் போன்களை சில்லறையாக விற்பனை செய்வதில் மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ள நிறுவனம் மை ஜி ஆகும். சொந்தமாக இணையத்தள பக்கத்தை கொண்டிருக்கும் மை ஜி நிறுவனத்தின் விற்பனை மையங்கள் கேரளாவை தாண்டி தென்னிந்திய அளவில் நிறைய நகரங்களில் உள்ளன.

2006ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட மை ஜி நிறுவனம் வெற்றிக்கரமாக 18ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவும், அதேநேரம் சிறப்பாக பணியாற்றும் தொழிலாளர்களை கவுரவிக்கும் விதமாகவும் 6 பேருக்கு கார்களும், 16 பேருக்கு இருசக்கர வாகனங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், கேரளா மாநிலம் முழுவதும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. மேலும், இது மை ஜி நிறுவனத்திற்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

அந்த 6 கார்களில் ஹூண்டாய், ஸ்கோடா, எம்ஜி, ஃபோக்ஸ்வேகன் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் அடங்குகின்றன. 16 இரு சக்கர வாகனங்களில் 15 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களும், ஒரேயொரு ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கும் அடங்குகிறது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில், புல்லட் 350 பைக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை காணலாம்.

மை ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏகே ஷாஜி இந்த பரிசு வாகனங்களுக்கான சாவிகளை சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு தன் கைப்பட வழங்கியுள்ளார். இதற்காக, கோழிக்கோட்டில் ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக, ஷோரூம்களின் எண்ணிக்கையை 150 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 4000 ஆகவும் அதிகரிப்பதில் மை ஜி நிறுவனம் தீவிரமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மை ஜி நிறுவனம் இவ்வாறு தனது பணியாளர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வழங்குவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இன்னும் சொல்ல போனால், முந்தைய காலங்களில் மை ஜி வழங்கிய பரிசு பொருட்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வழங்கப்பட்டு இருப்பது கொஞ்சம் குறைவே ஆகும். ஏனெனில் இதற்குமுன் ஒருமுறை, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு காரை நீண்ட கால பணியாளர் ஒருவருக்கு மை ஜி வழங்கி சிறப்பித்து இருந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 14:58 [IST]
English summary
Mobile phone retailer gifted cars and bikes to his employees check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+