வெறும் துண்டுடன் வந்த மாடல் அழகி! திடீர்னு அதயும் கழற்றி வீசியதால் ஷாக்! பெரியவங்க மட்டும் வீடியோவ பாருங்க!
சமூக வலை தளங்களில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் மிகவும் விபரீதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது சாலைகளில் கார் அல்லது பைக்குகளில் சாகசங்களை செய்வது மற்றும் வாகனங்களை ஓட்டி கொண்டே காதலி/காதலன் உடன் 'ரொமான்ஸ்' செய்வது போன்ற காரியங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இது போன்ற செயல்கள், பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தொடர்ந்து ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு கொண்டேதான் இருக்கின்றனர்.
இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், இளம்பெண் ஒருவர் வெறும் துண்டை மட்டும் கட்டி கொண்டு சாலையில் உலாவுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

பார்ப்பதற்கு அவர் எதோ பாத்ரூமில் இருந்து நேராக சாலைக்கு வந்ததை போல் தெரிகிறது. இதனால் சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஆனால் உண்மையில் அந்த இளம்பெண் துண்டை மட்டும் கட்டி கொண்டு சாலைக்கு வரவில்லை.
அவர் உள்ளே மாடர்ன் உடை அணிந்துள்ளார். அதை மறைத்து, துண்டை மட்டும் கட்டி கொண்டு வந்ததை போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவின் ஒரு கட்டத்தில், அவர் திடீரென துண்டை கழற்றி வீசுகிறார். அப்போதுதான் அவர் உள்ளே ஆடை அணிந்திருப்பதே தெரிகிறது.

சமூக வலை தளங்களில் லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் தோன்றும் இளம்பெண்ணின் பெயர் தனுமிதா கோஷ் என கூறப்படுகிறது. இவர் மாடல் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாடல் என்பதால், இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்திலும் இவர் பிரபலமாக உள்ளார். ஆனால் தனுமிதா கோஷின் இந்த செயலை, நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள், நாகரீகம் கிடையாது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தனுமிதா கோஷின் இந்த செயல் உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். நாகரீகம், கலாச்சார சீரழிவு என்பதை எல்லாம் கடந்து, இது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என நாங்கள் கருதுகிறோம். தனுமிதா கோஷ், மிகவும் பரபரப்பான சாலைகளில், வெறும் துண்டுடன் வலம் வந்துள்ளார்.
எனவேதான் இதை நாங்கள் ஆபத்து என கூறுகிறோம். வெறும் துண்டுடன் இளம்பெண் ஒருவர் சாலையில் வந்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனம் சிதறலாம். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சாலையில் வாகனம் ஓட்டும்போதோ அல்லது நடந்து செல்லும்போதோ, ஒரு நொடி கவனம் சிதறினால் கூட, பெரும் விபத்துக்கள் நடைபெறலாம்.
ஒரு நொடி கவன சிதறலால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில், நிறைய பேர் உயிரிழந்ததற்கான உதாரணங்கள் இங்கு உள்ளன. எனவே லைக்குகளை பெற வேண்டும் என நினைப்பவர்கள், இதை எல்லாம் புரிந்து கொண்டு, பக்குவமாக செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால், காவல் துறை அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை (Instagram Reels Videos) எடுப்பதற்காக, பொது சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திய நிறைய பேர் மீது கடந்த காலங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்த போதிய அளவில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதையே, தனுமிதா கோஷின் இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








