என்னங்க சொல்றீங்க இது அம்பாசிடருக்கு மாற்றா! என்னதான் முழுசா மஞ்சள் நிறத்தை போத்தியிருந்தாலும் அதுபோல வராது!
மஞ்சள் நிறத்தில் மிதக்கும் கப்பலைப் போன்று கொல்கத்தா டாக்சி துறையை அலங்கரித்து கொண்டிருக்கின்றன அம்பாசிடர் டாக்சி (Ambassador Taxi)-கள் இப்போது குறைவான எண்ணிக்கையிலேயே இவை பயன்பாட்டில் இல்லை. இது பலருக்கும் வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இவை படிபடியாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே மஞ்சள் நிற அம்பாசிடர் கார்களின் இடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக தற்போது வேறொரு கார் மாடல் அந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான வேகன்ஆர் (WagonR) கார் மாடலே அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. என்னதான் அம்பாசிடர் காரை போல முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தால் இது அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும், அது அம்பாசிடர் இல்லை என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும், அதில் கிடைத்த டிராவல் அனுபவமும் இதில் கிடைக்கவில்லை என்றும் புதிய வேகன்ஆர் டாக்சியை பயன்படுத்திய பலரும் கருத்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர். அம்பாசிடர் காரைக் காட்டிலும் மிக அதிக அட்வான்ஸ்டு அம்சங்களை தாங்கியதே இந்த வேகன்ஆர் கார் மாடல் ஆகும்.
இருப்பினும், அம்பாசிடரில் பயணித்தது தனி அனுபவம் என்கின்றனர். சமீபத்திலேயே இந்த மஞ்சள் நிற ஹேட்ச்பேக் டாக்சிகளை மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 20 மஞ்சள் நிற வேகன்ஆர் டாக்சிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதுமட்டுமல்ல இன்னும் இரண்டு மாதங்களில் இதுபோன்று 3 ஆயிரம் புதிய வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. புதிதாக பயன்பாட்டிற்கு வர இருக்கும் டாக்சிகள் பயணிகளுக்கு அதிக சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இப்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் வேகன்ஆர் கார் மாடலில் டிரைவருக்கு, பயணிகளுக்கு ஏர் பேக் வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், சென்ட்ரல் டோர் லாக்கிங் சிஸ்டம், ஸ்பீடு லிமிட் வசதி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் டாக்சி துறைக்காக வேகன்ஆர் டூர் எச்3 (WagonR Tour H3) எனும் வேரியண்ட் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி தேர்வு கிலோவிற்கு 33.48 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் வேகன்ஆர் கார் மாடல் அதிக மாடர்ன் கால அம்சங்களைத் தாங்கி இருந்தாலும், அது அம்பாசிடர் காருக்கு இணையானதாக இருப்பதில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அதேவேளையில், இப்போது அம்பாசிடர் புதிய அவதாரத்தில் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது உறுதியான தகவல் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








