மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

தமிழகம் உள்பட நான்கு மாநில நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்கு உதவி வருகின்றன. அதே சமயம் அவை நாளுக்கு நாள் மிகவும் அபாயகரமானவையாகவும் மாறி கொண்டுள்ளன. ஆம், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,42,268. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51,204. அதன்பின் வந்த 2016ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,42,359 சாலை விபத்துக்கள் நடைபெற்றன. இதில், 52,075 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

அதே சமயம் கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,41,466. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,181. அதே சமயம் கடந்த 2018ம் ஆண்டு, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்கள் இல்லை.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

ஆனால் கடந்த 2018ம் ஆண்டில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் 54,046 பேரின் உயிரை பறித்திருந்தன. தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு காரணம்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவது என்பது உள்ளூர் போலீசாரின் பொறுப்பாகும். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்தந்த உள்ளூர் போலீசாரால் தேசிய நெடுஞ்சாலைகளின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது. இதுதவிர தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

ஆனால் காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டுள்ளது. ஒரு சில வெளிநாடுகளில், தேசிய நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து அமைப்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற அமைப்புகளும் இல்லை. எனவே இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிகளை மிக கடுமையாக அமல்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்த புதிய திட்டம் ஒன்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக, முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு தேசிய நெடுஞ்சாலைகளில் பணியமர்த்தப்படவுள்ளது.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

அவர்களுக்கு உடலில் பொருத்தி கொள்ளக்கூடிய பாடி கேமராக்களும் (Body Camera) வழங்கப்படவுள்ளன. இதுதவிர தேசிய நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்களும் நிறுவப்படவுள்ளன. ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் இடைவெளியிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

மத்திய அரசின் இந்த புதிய திட்டம் குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள பாடி கேமராக்கள் உள்பட அனைத்து கேமராக்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இதற்கென பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படவுள்ளன.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

அத்துடன் இந்த கேமராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடனும் இணைக்கப்படும். எனவே அவர்கள் விதி மீறல்களை பதிவு செய்து, வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில், அபராதம் விதிக்க முடியும். அல்லது தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்துதான் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

என்ஐசி எனப்படும் தேசிய தகவல் மையமானது (NIC - National Informatics Centre), வாகனங்கள் மற்றும் டிரைவர்களின் தகவல்களை வைத்திருக்கும் களஞ்சியமாக உள்ளது. எனவே தேசிய தகவல் மைய டேட்டா பேஸில் இருந்து, வாகன உரிமையாளர்கள் மற்றும் விதிமுறையை மீறியவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் போலீசாரால் பெற முடியும்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களின் உடலில் பாடி கேமராக்கள் பொருத்தப்படுவதால், அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்ய முடியும். போக்குவரத்து விதிமுறையை மீறியவர்கள், தவறான நடத்தையை வெளிப்படுத்தினால் அதுவும் பதிவாகும். அதே சமயம் அதிவேகம், தவறான ஓவர் டேக்கிங், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்யும்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வது, போக்குவரத்தின் ஓட்டத்திற்கு எதிராக வாகனம் இயக்குவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களை ரோந்து வந்து கொண்டே இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாடி கேமரா மூலம் பதிவு செய்வார்கள்'' என்றனர். இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

முதற்கட்டமாக தமிழ்நாடு, ஹிமாச்சல பிரதேசம், பீகார் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த நான்கு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெறும் 11 தேசிய நெடுஞ்சாலை ஸ்ட்ரெச்சுகள் (Highway Stretches) தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இந்த இடங்களில் மட்டும்தான் இந்த புதிய கண்காணிப்பு திட்டம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய 3 மாநிலங்களில் தலா 400 கிலோ மீட்டரும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 350 கிலோ மீட்டரும் அடங்குகின்றன. ஆக மொத்தம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,550 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இதன்பின் படிப்படியாக இந்தியா முழுவதும் உள்ள மற்ற தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொருளாதர ரீதியிலான உதவிகளை உலக வங்கி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''சோதனை அடிப்படையிலான இந்த திட்டம் எங்கெல்லாம் அமலுக்கு வரவுள்ளதோ, அந்தந்த மாநில போலீசாருடன் நாங்கள் ஏற்கனவே பேசி விட்டோம். இது தொடர்பான கூட்டங்கள் பல முறை நடந்து விட்டன'' என்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இதுபோன்ற திட்டங்கள் வரவேற்க கூடியதே.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக முயன்று வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா இதற்கு ஓர் உதாரணம்.

மாஜி ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர்... தமிழக நெடுஞ்சாலைகளில் மோடி அரசு செய்யவுள்ள அதிரடி இதுதான்

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என எதிர்கட்சிகள் ஒரு புறம் குற்றம் சாட்டி வந்தாலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு உயர்த்த இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என மத்திய அரசு கருதுகிறது.

Source: TOI

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2019, 16:10 [IST]
English summary
Modi Government's New Project To Reduce Accidents On National Highways. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+