'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

'ஒரே நாடு ஒரே வரி' திட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி 'ஒரே நாடு ஒரே கார்டு' என்னும் பொது மொபிலிட்டி அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை ஏற்றதிலிருந்து 'டிஜிட்டல் இந்தியா' என்ற பெயரில் அனைத்து துறையிலும் டிஜிட்டல் முறையை புகுத்தி வருகிறது. அந்தவகையில், பணமில்லா பரிவார்த்தனை, அனைத்து அரசு துறைகளிலும் முழு அளவிலான கணினிமயம் உள்ளிட்ட பணிகளை அந்தந்த மாநில அரசுகளுடன் செயல்படுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்துத்துறையையும் டிஜிட்டல் மயமாக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி 'ஒரே நாடு ஒரே கார்டு' என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இத்திட்டத்தின்கீழ், தேசிய அளவில் இயங்கும் பஸ், மெட்ரோ ரயில் கட்டணம், ரயில் நிலைய நடைமேடை டிக்கெட், பார்க்கிங், சுங்க கட்டணம், ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கு இந்த கார்டின்மூலம் கட்டணம் செலுத்த முடியும். இதேபோன்று, தேவைப்படும்போது வங்கி ஏடிஎம்களிலிருந்து பணமும் எடுத்துக்கொள்ளலாம்.

'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

போக்குவரத்துத்துறையை மேம்படுத்தும் வகையிலும், டிஜிட்டல் பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், தேசிய பொது மொபிலிட்டி கார்டு அடிப்படையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான கார்டை மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கார்டானது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், வங்கி கார்டைப் போன்று ரூபே டெபிட் அண்ட் பிரீபெய்டு கார்ட் என எழுதியிருக்கும்.

'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

இந்த கார்டை வங்கிகளின் உதவியுடன் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைப் போன்று மட்டுமின்றி, இது மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு வழங்கும் ஸ்மார்ட் கார்டைப்போன்றும் இருக்கும். மேலும், பயணத்தின்போது எளிமையமாகப் பயன்படுத்தும் விதமாக காண்டக்லஸ் கார்டாகவும் இந்த கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு மூலம் அந்தந்த மாநிலத்தில் உள்ள ரயில்களை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது வழங்கவிருக்கும் இந்த கார்டின்மூலம் தேசத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள மெட்ரோ ரயில்நிலையங்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும். இந்த கார்டை முதற்கட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் சோதனையோட்டமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

இந்த சோதனையோட்டம் பெருமளவில் வரவேற்பைப் பெற்றநிலையில், நாடு முழுவதும் இதனைப் பிரமதர் மோடி அறிமுகம் செய்துள்ளார். இந்த ரூபே கார்டை பெற நீங்கள் கணக்கு வைத்துள்ள உங்கள வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, இது எஸ்பிஜ, பிஎன்பி உள்ளிட்ட 25 வங்கிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இதனை பேடிஎம் ஆன்லைன் ஷாப்பிங் ஆப் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

'ஒரே நாடு ஒரே வரி' திட்டம் போல் 'ஒரே நாடு ஒரே கார்டு' : மோடியின் மெகா திட்டம்!

இந்த ரூபே கார்டு மூலம் பயன்படுத்தும்போது சில கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த கார்டின் பயன்கள் சிலவற்றை வரிசைப்படுத்தி கீழே பார்க்கலாம்.

இந்த கார்டு மூலம் மெட்ரோ ரயில், பேருந்து, புறநகர் ரயில் நிலையம், சுங்க வரி, பார்க்கிங், ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கு இந்த கார்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் நாம் ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக பயன்படுத்தும்போது, கேஷ்பேக் ஆஃபர்கள் வழங்கப்படும்.

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது, நாம் எடுக்கும் தொகைக்கு ஏற்ப 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும்.

கார்டைப் பயன்படுத்தி கடைகளில் பணம் செலுத்தும்போது 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். இதேபோன்று வெளிநாடு பயணங்களிலும் சர்வதேச பணப்பறிமாற்றத்தின்போதும் கேஷ்பேக் சலுகைககள் வழங்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Modi Launches One Nation One Card Scheme. Read In Tamil.
Story first published: Friday, March 8, 2019, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X