பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றம்..??

பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றப்பட்டதா..??

By Azhagar

இந்திய பிரதமர் நரேந்திர மோடி செடான் மாடல் காரில் இருந்து தற்போது எஸ்.யூ.வி ரக காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

மோடியின் இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையையும் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

நாட்டின் 71வது சுதந்திர தினத்திற்காக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

இதற்கான ஒத்திகை கடந்த ஆகஸ்டு 13ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது மோடி தனது அலுவல் வாகனமாக உள்ள பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தார்.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

ஆனால் சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றுவதற்காக வந்த மோடி கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்திறங்கினார்.

Recommended Video

2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

இது நாடு முழுவதும் மிகுந்த ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது. காரணம், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, சிறப்பு பாதுகாப்புகளுடன் பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் கார் அவருக்கு வழங்கப்பட்டது.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

இந்நிலையில், 71வது சுதந்திர தினத்தில் செங்கோட்டைக்கு வந்த மோடி, வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபுள்யூ காரை விடுத்து, புதிய ரேஞ்ச் ரோவரில் வந்திறங்கினார்.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி பேசிய அரசு தரப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் மாற்றப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

ஆனால் ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை மோடி பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இந்த காரையே தனது அரசு முறை பயணங்களுக்காக தொடர்வாரா என்பது தெரியவில்லை.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

மோடி தனது அலுவல் வாகனத்தை மாற்றி இருப்பது இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டுமில்லாமல், அரசியல் தரப்பிலும் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

அதேபோல தனது சுதந்திர தின உரையில் அவர் பாகிஸ்தானை பற்றியோ, எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை பற்றியோ நேரடியாக பேசவில்லை.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

சுதந்திர தின ஒத்திகையின் போது வழக்கமான பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தவர், ஏன் திடீரென சுதந்திர தினத்தன்று ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்தார் என்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

தனது அலுவல் வாகனத்தை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி முடிவெடுத்தாலும், அதற்கு என்று பல்வேறு விதிமுறைகள் இந்திய அரசியல் சட்டமைப்பில் உள்ளது.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடியின் பாதுக்காப்பை அவருக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்புக் குழுவே உறுதி செய்யும்.

ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காருக்கு மாறிய பிரதமர் மோடி..!!

அந்த குழுவினர் தான் மோடி கால சூழ்நிலைக்கு தகுந்த வாறு எந்த வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Indian Prime Minister Has Chosen Range Rover SUV on the Occasion of 71st Independence Day. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X