மோடியும் புதினும் பயணித்த காரின் விலை இவ்வளவு கோடியா? எல்லாமே இதுல அதிசயம் தான்.

சீனாவில் நடந்த ஷாங்காய் கோஆப்ரேஷன் ஆர்கனிசேஷன் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்பொழுது இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒரே காரில் பயணித்தனர். ரஷ்ய அதிபருக்கு சொந்தமான காரில் இந்திய பிரதமர் பயணித்தது தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த கார் குறித்து பலரும் தேடி வருகின்றனர். உலகின் பாதுகப்பான கார்களில் ஒன்றாக இந்த காரும் இருக்கிறது. குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவில் நடந்த SCO மாநாட்டில் கலந்து கொண்டார். அதற்கு முன்னர் ரஷ்ய அதிபரும், இந்திய பிரதமரும் சந்தித்து கலந்துரையாடினர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ரஷ்ய அதிபருக்கு சொந்தமான ஆரஸ் செனட் என்ற காரில் சென்றனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் இந்த கார் குறித்து தற்போது சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர். இதன்படி ரஷ்ய அதிபரின் இந்த கார் அதிக சொகுசு வசதி மற்றும் உயர்ரக பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.

modi putin car ride

இந்த காரை ரஷ்யாவின் NAMI என்ற அமைப்பு உருவாக்கியள்ளது. இந்த காரை ரஷ்ய அதிபர் முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வதற்காகவும் வெளிநாட்டு பயணங்களுக்காகவும் பயன்படுத்தி வருகிறார். இந்த கார் முற்றிலும் ஆயதம் ஏந்திய காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மல்டி லேயர் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் முற்றிலும் ஸ்டீல் செராமிக் மற்றும் மற்ற மெட்டிரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 7.62மிமீ ரைஃபில் புல்லட் கூட இந்த காரை துளைக்க முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் ரஷ்யாவின் பிஆர் 5 மற்றும் ஐரோப்பாவின் விஆர் 10 பாதுகாப்பு தரங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் உள்ள கண்ணாடிகள் பெரிய புல்லட்டிலிருந்து குண்டு வந்தாலும் தாங்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த காரின கதவுகள் ஜாயிண்ட்கள் எல்லாம் காருக்கு வெளியே குண்டு வெடி்ததாலும் காருக்குள் எந்த பாதிப்பும் இருக்காது. அதே நேரம் காருக்குள் விஷ வாயுவை வெளியிலிருந்து செலுத்த நினைத்தாலும் உள்ளே விஷ வாயு செல்லாது.

modi putin car ride

இந்த காரின் கீழ் பகுதியும் மேல் பகுதியும் ஸ்பெஷல் பிளேட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெடிகுண்டு இந்த கார் மீது விழுந்து வெடித்தாலும் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது. இந்த காரின் கட்டமைப்பு ஒரே பீஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெடி குண்டு பிடித்தாலும் காருக்கு எந்த விதமான சேதாரமும் ஏற்படாது. இதனால் காருக்குள் இருக்கும் பயணிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு 598 எச்பி பவரைய வழங்குகிறது. இந்த கார் எடை அதிகமான காராக இருக்கிறது. இருந்தாலும் இந்த கார் அதிக இன்ஜின் திறன் காரமாக 0-100 கி.மீ வேகத்தை வெறம் 6 நொடிகளில் பிக்கப் செய்து வருகிறது. இந்த காரின் டயர்கள் பஞ்சரானாலும் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. இந்த கார் பாதுகாப்பிற்காக 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படி வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

modi putin car ride

இந்த காரில் ஸ்பெஷல் பாலிமர் லீக்கேஜ் மற்றும் குண்டுவெடிப்பிற்கு பிறகு காருக்குள் எந்த விஷயம் செல்லாத அளவிற்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு வெளியே விஷவாயு அல்லது கெமிக்கல் தாக்குதல் நடந்து அது ஏசி அல்லது வேறு வழியாக உள்ளே செல்லாமல் தடுக்க ஏர்ஃப்ரூரிஃபிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கார் இந்திய மதிப்பில் ரூ3 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த காரில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்றால் சிசிடிவிகேமரா, இன்டர்காம் சிஸ்டம், எமர்ஜென்ஸி எக்ஸிட், அல்டரா செக்யூர் கம்யூனிகேஷன் நெட்வொர்க், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இதை கார் என எளிதாக சொல்லிவிட முடியாது. இது ஒரு நகரும் அரண்மனை. உலகின் முக்கியமான தலைவருக்கான பாதுகாப்பை மனதில் வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஒரு அதிசயம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பிரதமர் மோடி தற்போது ரஷ்யாவுடன் நட்பில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவும் இதில் சேர்ந்துள்ளது. ரஷ்யாவுடனான இந்த உறவு நிச்சயம் உலக மக்களால் கவனித்து பார்க்கப்படுகிறது. இந்த கார் மக்களை நிச்சயம் அதிசயக்க செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 2, 2025, 15:50 [IST]
English summary
Modi putin car ride highlights know about aurus senat
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X