சாதனையில் தொடங்கி சர்ச்சையில் முடியும் பிரதமர் மோடியின் முதல் கடல்விமானப் பயணம்..!!
சாதனையில் தொடங்கி சர்ச்சையில் முடியும் பிரதமர் மோடியின் முதல் கடல்விமானப் பயணம்..!!
இந்தியாவில் முதல் முறையாக சபர்மதி ஆற்றில் இயக்கப்பட்ட கடல் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.

குஜராத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் சாலை வழி பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது.
Recommended Video


தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளான நேற்று சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் சாலை வழி பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அகமதாபாத் காவல்துறை விதித்த தடை உத்தரவால், சாலை வழி பிரச்சாரம் செய்யாமல், கடல் விமானம் மூலம் சபர்மதி செல்லும் திட்டத்தை செயல்படுத்தினார் பிரதமர் மோடி.

கடல்விமானம் மூலம் தாரோய் அணைப் பகுதிக்கு சென்ற அவர், அம்பாஜி என்ற பகுதியில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சாலை வழியாக கோயிலுக்கு சென்றால் அது தேர்தல் பிரச்சாரமாக கருத்தில் கொள்ளப்படும்.

அதை தவிர்க்கவே, மோடி கடல் விமானம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு செல்லும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என்கிறது அரசியல் வட்டாரம்.
இந்தியாவின் முதல் கடல்விமானத்தில் பறந்த மோடி: (வீடியோ)
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்து விட்டாலும், கடல் விமானம் மூலம் பிரதமர் மோடி பயணம் செய்துள்ளது ஒரு புதிய பிரச்சார யுக்தி தான் என்கிறது சில வடயிந்திய ஊடகங்கள்.

இந்தியாவில் முதல் கடல் விமான சேவையில் பயணித்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மோடி, சாலை வழி, வான் வழிகளை இணைக்கு அரசின் திட்டம் சிறப்பாக உள்ளது. கடல் விமானம் மூலம் தாரோய் பகுதிக்கு செல்கிறேன்.

போக்குவரத்து துறைக்காக மேம்படுத்தப்பட்ட இந்த சேவைகளை அனைத்துமே 125 கோடி இந்திய மக்களுக்குத்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலையில் சபர்மதி ஆற்றில் மீது பறக்கத்தொடங்கிய கடல் விமானம், குறிப்பாக 35 நிமிடங்கள் பறந்து 180கி.மீ தொலைவில் அமைந்துள்ள தாரோய் பகுதியை சென்றடைந்தது.

கடல்விமானத்தின் பைலட்டாக செயல்பட்ட ஜான் கூல்ட் பிரதமர் மோடியுடன் இந்தியாவின் முதல் கடல்விமானத்டில் பயணித்த அனுபவத்தை சிலாகித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பான பயணத்தை கடல்விமானம் மூலம் வழங்கியதில் பெரிய மகிழ்ச்சி. அவர் ஒரு சிறந்த பயணி. மோடிக்கு விமானத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு அரிய அனுபவம்.

கடல்விமானங்கள் பல நாடுகளில் பிரபலமாக உள்ளன. அதற்கான சூழல் இந்தியாவிலும் உள்ளது. அதனால் விரைவில் இங்கேயும் பல கடல் விமானங்கள் இயக்கப்படும். என்று கூறினார் விமானியான ஜான் கூல்ட்

பாதுகாப்பு காரணங்களை கருதி, இந்திய பிரதமர் பயணிக்கும் விமானங்கள் ட்வின் அல்லது மல்டி ஜெட் கொண்ட எஞ்சினைகளை பெற்றிருக்க வேண்டும் என்பது ப்ரோட்டோகால்.

ஆனால், பிரதமர் மோடி பயணம் செய்த சபர்மதி ஆற்றில் இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல்விமானத்தில் சிங்கிள் எஞ்சின் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக புதிய சர்சை தற்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








