ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

தமிழகத்திற்கான ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு, மக்களை கவரும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி, சமீபத்தில் நாட்டில் உள்ள விவசாயிகளைக் கவரும் விதமாக, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை பிப்ரவரி மாதமும், இரண்டாம் தவணையாக ஏப்ரல் மாதமும் வழங்குவதாக அவர் வாக்குறுதியளித்தார்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

முன்னதாக, மக்களைவத் தேர்தல் நடைபெறுவதுக்கு முன்பாக, இதேபோன்றதொரு வாக்குறுதியை மோடி அளித்திருந்தார் என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றே. அதாவது, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதி குறித்து தற்போது வரை ஒரு வார்த்தைக் கூட வெளிவராமல் இருப்பது மக்களுக்கு வேதனையளிக்கும் விசயமாக உள்ளது.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

இந்த நிலையில், தற்போது 2019ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நமது பாரத பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதற்காக தற்போது ரூ. 15.75 கோடி செலவில், அவரது ஆட்சிக்குறித்த மடலை மக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். 'ஆயுஷ்மான் பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ், 7.5 கோடி மக்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. அந்த கடிதத்தில் அவரது ஆட்சிக் குறித்தும், அவரின் ஏழ்மையான வாழக்கைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

உள்ளூர் மொழியில், தனது கைப்பட மோடி இக்கடிதத்தை எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதங்களை பிரிண்டிங்க் செய்யும் பணி நடைபெற்றுவதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, சவுபாக்யா திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கியுள்ளார். மோடியின் இச்செயலானது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

இருப்பினும், மக்களவைத் தேர்தலை நினைவில் கொண்டு பிரதமர் மோடி, மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அதேபோன்று, தமிழகத்தைக் கவரும் ரூ.40 ஆயிரம் கோடி அளவிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று அவர் தமிழகம் வருகிறார்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி நடபெறவில்லை என்றாலும், ஆளும் அதிமுக மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மோடி செய்து வருகிறார். இவர், மதுரையில் தான் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதையடுத்து, தற்போது இன்று கன்னியாக்குமரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தக்குதலைக் குறித்து பேச இருப்பதால், அரசியல் சார்ந்த பிரச்சாரமாக இருக்காது என தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக அரசின் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரி முக்கியப் பகுதிகள் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, முதலில் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகின்றார். இதையடுத்து, அவருக்கான பிரத்யேக காரில் புறப்பட்டு, விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரி மைதானத்திற்கு வருகிறார்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

இதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் நடைபெறும் விழாவில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். மேலும், ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கிமீ தூர புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயங்கவிருக்கும் புதிய தேஜஸ் ரயிலின் சேவையை பிரதமர் மோடி நாட்டிற்காக அர்பணிக்கிறார். அதேபோன்று, 2 ஆயிரத்து 995 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள புத்தம் புதிய தேசிய நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லையும் அவர் நாட்ட உள்ளர்.

ரூ. 40,000 கோடியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள்: மோடியின் இத்திட்டம் இதற்கு தானா?

மொத்தம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பின்னர், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Modi To Launch Various Development Projects In Tamilnadu. Read In Tamilnadu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X