கவ்ச்சிகரமான புதிய சைலென்சர்களுடன் மாறுதல் செய்யப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக்!
கவர்ச்சிகரமான புதிய இரட்டை சைலெசன்சர்கள் பொருத்தப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல்கள் பொருத்த வரை, மாடிஃபிகேஷன்கள் எனப்படும் கவர்ச்சியை கூட்டும் நடவடிக்கைகள் மிகவும் சர்வசாதாரணமான விஷயமாகும். வழக்கமாக தோற்றத்தை வித்தியாசப்படுத்துவதற்கும், செயல் திறனை கூட்டுவதற்கும் இவ்வாறான விஷயங்கள் செய்யப்படுகிறது.
அந்த வகையில் செயல்திறன் கூட்டப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

செயல்திறன் கூட்டல்;
பல்சர் ஆர்எஸ்200 பைக், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளாக உள்ளது. இது வழக்கமாக முழு பாடி ஃபேரிங் உடன் வெளியாகிறது. இந்த பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் செய்யப்பட்ட மாற்றங்கள், இதன் தோற்றத்தையும், செயல்திறனையும் கூட்டுவதாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக, பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பக்கவாட்டில் தான் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் பொருத்தபட்டிருக்கும். ஆனால், இதன் சீட்களுக்கு அடியில் 2 எக்ஸ்ஹாஸ்ட்கள் கொண்ட சிஸ்டம் (twin under seat system) பொருத்தப்பட்டுள்ளது.

மாற்றங்கள் செய்த நிறுவனம்;
இந்த பஜாஜ் பலசர் ஆர்எஸ்200 பைக்கிற்கு செய்யப்பட்டுள்ள புதுப்பிப்பு, மும்பையை சேர்ந்த மார்க் ஃபெர்பார்மன்ஸ் ரேசிங் எக்ஸ்ஹாஸ்ட் (Mark Performance Racing Exhaust) என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கிற்கு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மும்பையை சேர்ந்த மார்க் ஃபெர்பார்மன்ஸ் ரேசிங் எக்ஸ்ஹாஸ்ட் (Mark Performance Racing Exhaust) என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம், ஸ்டாக் எக்ஸ்ஹாஸ்ட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. ஆனால், இதன் ஃபினிஷிங் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியம் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்;
எனினும், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் மூலம், உண்மையில் செயல்திறன் கூடியுள்ளதா, இல்லையா என்பதற்கு சரியான தரவுகள் இல்லை. ஆனால், இந்த எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டத்திற்கு சேர்க்கப்பட்டுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியம் கூட்டு நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும்.

செயல்திறன்;
வழக்கமான பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக், 24.2 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 18.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இறுதி கருத்து;
உங்களுக்கு இந்த மாற்றங்கள் பிடித்திருக்கிறதா? நீங்களும், இத்தகைய மாற்றங்கள் செய்து கொள்ள விரும்புகிறீர்களா?
நீங்களும் மார்க் ஃபெர்பார்மன்ஸ் ரேசிங் எக்ஸ்ஹாஸ்ட் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகைய புதுப்பிப்பு செய்து கொள்ள 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த புதுப்பிப்பிற்கு ஒரு வருட கால வாரண்டியும் வழங்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
பாவாடை, தாவணியில் கிலுகிலுப்பூட்டும்... அட நமக்கு தெரிஞ்சதெல்லாம் கார்தாங்க!
கார்ல இவுங்க பண்ணியிருக்கற ரவுசுகளை பாருங்க!
அழகு சேர்க்கப் போய் அவலட்சணமாகிய கார்கள்!


Click it and Unblock the Notifications








