அந்த காரையே தூக்கீட்டாங்களா... ஓனர் அவ்ளோ சொல்லியும் காதுலயே போட்டுக்கல... அதிரடி காட்டிய அதிகாரிகள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிவிக் (Honda Civic). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் ஹோண்டா சிவிக் காரை நிறைய பேர் மாடிஃபிகேஷன் (Modification) செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது சட்ட விரோதமானது. ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், நிறைய பேர் ஹோண்டா சிவிக் கார்களை மாடிஃபிகேஷன் செய்து சாலையில் ஓட்டி வருகின்றனர். அப்படி மாடிஃபிகேஷன் செய்து சாலையில் ஓட்டப்பட்ட ஒரு ஹோண்டா சிவிக் கார் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கொல்லம் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெகுவாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் கார் ஒன்று அவ்வழியாக வந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்த காரணத்தால், அந்த காரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
ஆனால் ஹோண்டா சிவிக் காரின் டிரைவர் காரை நிறுத்தவில்லை. அங்கிருந்து தப்பி சென்றார். அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும்போது, அவர் சிறிய அளவிலான விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பாக மோட்டார் வாகன துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர்.

இதன் முடிவில் சம்பந்தப்பட்ட ஹோண்டா சிவிக் கார் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன துறை அதிகாரிகள் நிறுத்த முயன்றபோது, இந்த ஹோண்டா சிவிக் காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனினும் தீவிர விசாரணையின் மூலமாக சம்பந்தப்பட்ட ஹோண்டா சிவிக் காரை, மோட்டார் வாகன துறையின் அதிகாரிகள் கண்டறிந்து அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர். விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்தது, நம்பர் பிளேட் இல்லாதது மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்தபோது விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ஹோண்டா சிவிக் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹோண்டா சிவிக் காரில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் உள்பட பல்வேறு மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாக எந்த அதிகாரிகளும் தனது காரை நிறுத்தியது கிடையாது என உரிமையாளர் கூறியுள்ளார். அத்துடன் இது 'ப்ராஜெக்ட் கார்' எனவும் அவர் வாதாடியுள்ளார்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வாகன கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவதற்காகவே இந்த காரை இப்படி மாடிஃபிகேஷன் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த இடங்களுக்கு எல்லாம் ஃப்ளாட்பெட் லாரியில் (Flatbed Truck) வைத்துதான், காரை கொண்டு செல்வோம் எனவும், சாலையில் ஓட்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் அதிகாரிகள் ஏற்று கொள்ளவில்லை.
விதிமுறைகளை மீறியதாக கூறி அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர். வித்தியாசமான மாடிஃபிகேஷன்களுடன் வாகன கண்காட்சிகளில் பங்கேற்பதால், இது கேரள மாநிலத்தை சேர்ந்த கார் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் இந்த சம்பவம் ஒரு பாடம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. விதிமுறைகளை மீறினால், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








