மாருதி 800 காரும், கொஞ்சம் ஆர்வமும் இருந்தால் போதும்...!!

கார் மாடிஃபிகேஷன் செய்வதற்கு பெரிய பட்ஜெட் எல்லாம் தேவையில்லை. கொஞ்சம் பணமும், அதைவிட அதிக ஆர்வமும் முக்கியம். அத்துடன், கார் மாடிஃபிகேஷன் செய்வதில் கைதேர்ந்த மெக்கானிக்கும் கிடைத்துவிட்டால், உங்கள் கனவு எளிதாக நனவாகும்.

அதுபோன்று, குறைவான பட்ஜெட்டில் மாறுதல்கள் செய்யப்பட்ட ஓர் மாருதி 800 கார் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம். இது உங்கள் கனவை நனவாக்கவும், ஆர்வத்தை தூண்டுவதற்கும் ஏதுவாக அமையும் என்று நம்புகிறோம்.

பட்ஜெட்

பட்ஜெட்

இதுபோன்ற பழைய மாருதி 800 கார் ரூ.50,000 முதல் ரூ.75,000 பட்ஜெட்டில் நல்ல கண்டிஷனில் கிடைக்கிறது. எனவே, வீட்டில் கார் இருந்தால் கூட, உங்கள் ரசனையை நனவாக்கிக் கொள்ள இதுபோன்ற ஒரு மாருதி 800 காரை குறைவான பட்ஜெட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

மெக்கானிக்

மெக்கானிக்

மாருதி 800 காரை வாங்கும்போதே, அதில் மாறுதல்கள் செய்யும் அனுபவம் மிக்க அல்லது ஆர்வம் கொண்ட மெக்கானிக் ஒருவரையும் தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் நகரத்தில் இதுபோன்று இருக்கும் மெக்கானிக் பட்டறைகள் குறித்த விபரங்களை சேகரித்துவிட்டு காரை வாங்கவும்.

பொறுமை அவசியம்

பொறுமை அவசியம்

என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தையும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்து கொண்டு மேற்கொண்டு முயற்சிகளை தொடரவும். மேலும், மாறுதல்களை செய்வதற்கும், ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதிலும் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பொறுமையுடன் கார் மாடிஃபிகேஷன் பணிகளில் ஈடுபடுவது அவசியம்.

அசத்தும் மாருதி 800

அசத்தும் மாருதி 800

படத்தில் இருக்கும் காரை மெக்கானிக் ஒருவரே தனக்கு சொந்தமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளார். நான்கு கதவுகளுக்கு பதிலாக, இரண்டு கத்தரிக் கோல் அமைப்புடைய கதவுகள், கருப்பு- சிவப்பு வண்ண பெயிண்டிங் என அசத்தலாக மாற்றியிருக்கிறார். கண்ணாடி கூரையும் மிக முக்கியமானதாக குறிப்பிடலாம்.

முகப்பு மாறுதல்கள்

முகப்பு மாறுதல்கள்

ஹூண்டாய் ஆக்சென்ட் காரின் ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகள் மற்றும் பானட் ஸ்கூப் போன்றவை முக்கியமாக குறிப்பிடலாம். கருப்பு நிற அலாய் வீல்கள் நன்றாக இருக்கிறது.

பின்புறத்தில் மாற்றங்கள்

பின்புறத்தில் மாற்றங்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ரியர் ஸ்பாய்லரும் உள்ளது. ஆனால், பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாகம் கவர்ச்சியாக இல்லை. இரட்டை சைலென்சர் குழாய்களும் இந்த காரின் அழகுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. என்ன, உங்களுக்கும் மாடிஃபிகேஷன் ஆசை முளைத்துவிட்டதா, உடனே ஒரு நல்ல மாடிஃபிகேஷன் மெக்கானிக்கை தொடர்பு கொண்டு குறைவான பட்ஜெட்டில் உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்.

 மொத்த செலவு

மொத்த செலவு

ஒரு லட்சம் முதல் ஒண்ணேகால் லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இதுபோன்று காரை மாறுதல்கள் செய்து வாங்க முடியும்.

குறைந்த பட்ஜெட்டில் மாறுதல்கள் செய்யப்பட்ட மாருதி 800 கார்

இதுவும் மாருதி 800 மாடிஃபிகேஷன்தான்...

Source

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Maruti 800 did a pretty good job of bringing affordable motoring to the Indian masses, and goes down into the Indian automotive hall of fame as the best-seller that mobilized India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X