எல்லாரும் கையெடுத்து கும்பிடும் நல்ல மனிதருக்காக உருவாக்கப்பட்ட வாகனம்! புல்லட்-ப்ரூஃப் இருக்கா? இல்லையா?

வாடிகன் சிட்டி (Vatican City), உலகின் மிக சிறிய நாடு. முழுக்க முழுக்க போப் ஆண்டவருக்காக கட்டமைக்கப்பட்ட நாடு வாடிகன் சிட்டி எனலாம். உலகின் மொத்த பொருளாதாரத்தையும் மறைமுகமாக தீர்மானிக்கக்கூடிய நாடாக வாடிகன் உள்ளது என சில பொருளாதார நிபுணர்கள் கூற கேட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட இந்த ஐரோப்பிய நாட்டில் போப் பிரான்சிஸ் அவர்களின் போக்குவரத்துக்கான முற்றிலும் புதிய எலக்ட்ரிக் வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வாடிகன் சிட்டி நாட்டில் உள்ள செண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் பகுதியில் போப் பிரான்சிஸின் பிரார்த்தனை கூட்டம் நடப்பது வழக்கம். இந்த பிரார்த்தனை கூட்டத்திற்கு போப் பிரான்சிஸை அழைத்து வருவதற்கான வாகனமாக இனி முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் ஆனது இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்யப்படும் பிரபலமான மெர்சிடிஸ் வாகனம் ஆகும்.

mercedes g-class for pope francis

இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனங்களுள் ஒன்றாக ஜி-கிளாஸ் விளங்குகிறது. இந்த வாகனத்தை போப் பிரான்சிஸின் பயன்பாட்டிற்கு ஏற்ப மாடிஃபை செய்துள்ளனர். குறிப்பாக, பிரார்த்தனையின் போது பொதுமக்கள் அனைவரும் போப் பிரான்சிஸ் அவர்களை முழுமையாக காண வேண்டும் என்பதற்காக போப் பிரான்சிஸ் அமரும் இருக்கை நன்கு உயரமாக வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மழை பெய்தால் போப் பிரான்சிஸ் நனையாத வண்ணம் கண்ணாடியால் ஆன மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அமரும் இருக்கைக்கு இரு பக்கங்களிலும் பிடித்துக்கொள்ள கம்பிகள் வழங்கப்பட்டுள்ளன. போப் பிரான்சிஸ் அவர்கள் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறார். ஆதலால், அவரது சக்கர நாற்காலியை வாகனத்தின் மீது ஏற்றுவதற்கான வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

mercedes g-class for pope francis

எல்லாவற்றையும் விட முக்கியமாக, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் வாகனத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றி உள்ளனர். எலக்ட்ரிக் வாகனம் ஒன்று, போப் ஆண்டவரின் அதிகாரப்பூர்வ போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தப்பட உள்ளது இதுவே முதல்முறை ஆகும். ஆனால், போப் பிரான்சிஸ் தனது வெளிநாட்டு பயணங்களில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி உள்ளார்.

போப் பிரான்சிஸ் அணியும் வெள்ளை நிற உடைக்கு ஏற்ப, இந்த ஜி-கிளாஸ் வாகனத்தையும் வெள்ளை நிறத்திற்கு மாற்றியுள்ளனர். இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் வாகனத்தை மிகவும் நுணுக்கமாக மாடிஃபிகேஷன் செய்வதற்கு பல நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜி-கிளாஸ் வாகனம் எப்போது போப் பிரான்சிஸ் அவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்பதை வாடிகன் சிட்டி அரசாங்கம் தற்போதைக்கு தெரிவிக்கவில்லை.

mercedes g-class for pope francis

அதேபோல், போப் பிரான்சிஸின் பாதுகாப்புக்காக இந்த வாகனத்தில் என்னென்ன விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்கிற விபரங்களையும் வெளியிட வாடிகன் சிட்டி அரசாங்கம் மறுத்துவிட்டது. அதேபோல், ஜி-கிளாஸ் வாகனம் ஒன்றை இவ்வாறு மாற்றுவதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் வெளியிடவில்லை.

போப் ஆண்டவர் பதவியில் பிரான்சிஸ் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறார். புல்லட் ப்ரூஃப் வாகனங்களை பயன்படுத்துவதை புறக்கணிக்கும் போப் பிரான்சிஸ் மக்களை இன்னும் நெருக்கமாக சந்திக்க விரும்புபவராக உள்ளார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனது மதம் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமின்றி, உலகளவிலான சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்கும் அவ்வப்போது போப் பிரான்சிஸ் தனது கருத்தை வலியுறுத்துகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒருவராக போப் ஆண்டவரை சொல்லலாம். கிறித்துவ மத தலைவர் தான் போப் ஆண்டவர் என்றாலும், உலகின் பல நாடுகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு சக்தி போப் ஆண்டவர் பதவியில் இருப்பவருக்கு உள்ளது. அத்தகையவருக்கான வாகனத்தை நிச்சயமாக மிகவும் பாதுகாப்பானதாகவே உருவாக்கி இருப்பர்.

Image Source

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2024, 8:00 [IST]
English summary
Modified mercedes g class electric vehicle for pope francis use vatican unveiled
மேலும்... #modified cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X