இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டு வந்த மாடிஃபை சைலன்ஸர்கள் & காற்று அழுத்தம் கொண்ட ஹார்ன்கள் தானே நகர போலீஸாரால் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

அங்கீகாரம் பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கும் பாகங்களில் சிலவற்றை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வித்தியாசமான சத்தங்களுக்காக மாடிஃபை சைலன்ஸர்கள் & ஹார்ன்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி போலீஸார் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டு வருகின்றனர். மோட்டார்சைக்கிள்களை மாடிஃபை செய்வது இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

ஆனால் தற்போது தான் மோட்டார்சைக்கிள்கள் மாடிஃபை செய்யப்படுவதை தடுக்க போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்கு சான்றாக, மாடிஃபை சைலன்ஸர்களை மோட்டார்சைக்கிள்களில் இருந்து நீக்கி அவற்றை பொது மக்கள் பார்வையின் முன் போலீஸார் அழிக்கும் நிகழ்வுகளை சமீப மாதங்களாக அடிக்கடி பார்த்து வருகின்றோம்.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

இந்த வகையில் தான் தற்போது தானே போலீஸார் சுமார் 350 மாடிஃபை சைலன்ஸர்கள் & 125 காற்று-அழுத்த ஹார்ன்களை சாலை உருளை வாகனத்தை பயன்படுத்தி நசுக்கி அழித்துள்ளனர். இது தொடர்பாக நமஸ்தே தானே (Namaste Thane) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை தான் இங்கே காண்கிறீர்கள்.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

மாடிஃபை சைலன்ஸர்கள் ஒரு வகையில் பார்த்தால் பைக்கின் மைலேஜை குறைப்பதாகவே உள்ளன. அதுமட்டுமில்லாமல் வழக்கமான எக்ஸாஸ்ட் குழாய்களை காட்டிலும் அதிக புகையை வெளியிடும் வகையிலும் இவை மாறிவிடுகின்றன.

ஏனெனில் இவ்வாறான எக்ஸாஸ்ட் குழாய்களை அருகில் இருக்கும் மெக்கானிக்கோ அல்லது கஸ்டமைஸ்ட் நிறுவனங்களோ தான் வடிவமைக்கும். அவர்களுக்கு தொழிற்சாலையில் பணிபுரியும் பொறியியலாளர்கள் அளவிற்கு அறிவு திறன் இருக்குமா என்பது சந்தேகமே.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

இதனால் தான் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இருப்பினும் மற்ற மோட்டார்சைக்கிள்களில் இருந்து வேறுபடுவதற்காக இத்தகைய மாடிஃபை சைலன்ஸர்களை சில வாகன ஓட்டிகள் பொருத்துகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் தான்.

இவ்வாறான மாடிஃபை சைலன்ஸர்கள் தரும் சத்தத்தை பெற வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப மற்ற தொழிற்நுட்பங்களுடன் வடிவமைக்கப்படும் ராயல் என்பீல்டு, கேடிஎம் பைக்குகளை வாங்கலாமே என்பதுதான் போலீஸாரின் கருத்தாக உள்ளது.

இதையெல்லாம் பொருத்தக்கூடாது என எத்தனை முறை கூறுவது? மாடிஃபை சைலன்ஸர்களை சாலையில் போட்டு அழித்த போலீஸார்!!

தானே போலீஸார் கடந்த ஜூன் 14ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரையில் 18 போக்குவரத்து துணை-பிரிவுகளில் சட்டத்திற்கு புறம்பாக வடிவமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களை அடையாளம் காணும் பணியில் இறங்கினர். இதன்படி, இந்த பகுதிகளில் மட்டும் 190 இருசக்கர வாகனங்கள் அபாரதத்திற்கு உள்ளாகி உள்ளன.

இதில் சட்டத்திற்கு புறம்பான மாடிஃபை சைலன்ஸர்களை கொண்ட 121 இருசக்கர வாகனங்களும் அடங்கும். மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி கார்களிலும் ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு நிற படலம் ஒட்டுவதை கண்டறிந்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
350 Modified Silencers & 125 Pressure Horns Destroyed By Thane Police
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X