திருமண நாளில் மனைவியை உற்சாகபடுத்திய கணவனுக்கு சிறை! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
திருமண நாளில் மனைவியை உற்சாகப்படுத்த காரின் டிக்கியில் வானவேடிக்கையை வைத்து வெடி வெடித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை உற்சாகப்படுத்திய கணவர் தற்போது லாக் அப்பில் கம்பி எண்ணி வருகிறார். இந்த சம்பவம் என்று நடந்தது? எப்படி நடந்தது? என்ற விரிவான விவரங்களையும் இதில் வீடியோவையும் கீழே காணலாம் வாருங்கள்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்தவர் ரவித் கபூர். 25 வயதாகும் இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணமானது. இந்நிலையில் திருமணம் ஆகி 1 ஆண்டு ஆன திருமண நாளை கொண்டாட கணவனும் மனைவியும் முடிவு செய்துள்ளனர். இந்த நாளில் தனது மனைவிக்கு பிடித்த மாதிரி கொண்டாட நினைத்த ரவீத் கபூர் மனைவியை கவர்வதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அப்பொழுது அவர் தனது மனைவியை தனது சொந்தமான ஃபோர்டு முஸ்டாக் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரில் அழைத்து சென்றிருந்தார். அப்பொழுது மனைவிக்கு சர்ப்ரைஸ் வழங்கும் விதமாக தனது கார் டிக்கியில் வைத்திருந்த வானவேடிக்கை பட்டாசை கார் டிக்கியில் மேலே வைத்து கொளுத்தினார். .
பின்னர் காரை வேகமாக மொகாலியில் உள்ள சாலையில் எடுத்துச் சென்றார். மேலும் பின்னால் வரும் தனது நண்பர்களிடம் செல்போனை கொடுத்து அந்த செல்போனில் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்ய சொல்லி இருந்தார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார்.

இந்த சம்பவத்தின் போது இவர் காரில் சென்று கொண்டே பட்டாசு வெடித்ததாக அருகில் உள்ள வாகன ஓட்டியின் மீது தீப்பொறி பட்டு அவரது ஆடை தீயில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோவில் உள்ள சம்பந்தப்பட்ட நபரை பஞ்சாப் போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோவில் வாகனம் ஓட்டியது ரவீத் கபூர் தான் என அறிந்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் நடந்தது அதன் பின்பு போலீசார் குறிப்பிட்ட சம்பவத்தில் யார் ஈடுபட்டது என்பதை தேடி கண்டுபிடிப்பதற்குள் ரவித் கபூர் இந்த வீடியோ வைரலானதால் இந்த காரை அவர் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு நபருக்கு விற்று விட்டார். இதனால் தன்னை போலீசார் கைது செய்ய முடியாது என எண்ணி இந்த செயலை செய்துள்ளார்.ஆனால் போலீசார் சரியாக ரவித் கபூரை சுற்றி வளைத்து விட்டனர்.

தற்போதைய ரவீத் கபூரை கைது செய்த மொகாலி போலீசார் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட வீடியோவை அழிக்க சொல்லி உத்தரவிட்டனர். அதனால் ரவித் கபூரும் தன சமூக வலைதள பக்கங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கி விட்டார். ஆனால் நெட்டிசன்கள் மத்தியில் அந்த வீடியோ ஏற்கனவே வைரலாக பரவி விட்டது.
சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது அதை பயணத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் தனது மனைவியை தனது ஃபோர்டு முஸ்டாக் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரில் அழைத்து சென்றது வரை ரவித்கபூர் எந்த விதமான தவறையும் செய்யவில்லை. அத்துடன் அவர் நிறுத்தி இருக்க வேண்டும். அவர் காரிலேயே மொகாலி நகரை முழுவதும் தனது மனைவிக்கு சுற்றி காட்டி தனது திருமண நாளை கொண்டாடியிருக்கலாம்.
ஆனால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்ற பெயர்களில் காரில் பட்டாசு கொளுத்தியது அருகில் உள்ள சாலை வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருந்துள்ளது. மேலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டது. இதை அவர் வீடியோ எடுத்து வெளியிட்டு வைரலானது இளைஞர்கள் மத்தியில் இதுபோன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதாக இருந்தது.
போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோவை பார்த்து நீங்களும் அதே போல செய்யலாம் என முயற்சி செய்யாதீர்கள் பின்னர் நீங்களும் ரவீது கபூர் போலவே போலீஸ் ஸ்டேஷனில் தம்பி என்ன வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் வாகனத்தை பயணத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள். வாகனம் ஒன்றும் நீங்கள் சர்க்கஸ் காட்டுவதற்கான சாதனம் அல்ல.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக இப்படி வாகனங்களில் சாகசம் காட்டுவது என்னமோ வீரம் என்ற மனநிலையில் பலர் இப்படியான கிறுக்குத்தனங்களை செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது வாகனம் ஓட்டும் நபர்கள் வாகனத்தை பயனத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது போன்ற சாகசங்களை எல்லாம் செய்யக்கூடாது. இது உங்களுக்கு மட்டுமல்ல சக வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









