எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர்!! அவர் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை என்றால்... ஒரு குடும்பமே இன்று உயிரோடு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் உரிமையாளருக்கு உதவி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடந்து முடிந்த 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரான முகமது ஷமி உத்தரகாண்டில் உள்ள நைனிடல் என்ற பகுதிக்கு தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரில் சென்றுக் கொண்டிருந்து உள்ளார். அப்போது, செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கி இருந்தவர்களுக்கு ஷமி உதவியதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்த பதிவை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷமியின் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பார்க்கும்போது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பம், காரோடு மலையில் இருந்து கீழே விழுந்துள்ளனர். ஷமி வெளியிட்டுள்ள வீடியோவில், மரம் ஒன்றின் மீது அந்த குடும்பத்தின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் மோதி நிற்பதை காணலாம்.
செல்லும் வழியில் இந்த காட்சியை கண்ட முகமது ஷமி உடனே தனது மெர்சிடிஸ் காரை நிறுத்தி, அந்த குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார். காரில் இருந்து அந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பத்திரமாக வெளியே மீட்டுக் கொண்டுவந்த ஷமி, பின்னர் அவர்களை தனது மெர்சிடிஸ் காரில் அழைத்து சென்றுள்ளார்.

மலையில் இருந்து எவ்வாறு இந்த ஈக்கோஸ்போர்ட் கார் கீழே விழுந்தது என்பது தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காருக்குள் இருப்பதால், வளைவில் திருப்பும்போது எதிர்பாராத விதமாக கார் கீழே விழுந்திருக்கலாம். மரத்தின் மீது கார் மோதிய வேகத்தினால் உள்ளே இருந்தவர்கள் நிறைய பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அந்த மரத்தினால்தான் அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்.
இல்லையேல், கார் சரிந்துக் கொண்டே இன்னும் மோசமான நிலைக்கு அவர்களை தள்ளியிருக்கலாம். நல்லவேளையாக மரத்தின் மீது மோதி கார் நிற்க, அந்த வழியாக சரியான நேரத்தில் முகமது ஷமி சென்றுள்ளார். ஏனெனில், மலைப்பிரதேச பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் வராது. சில சமயங்களில், உதவி கிடைக்க மணிக்கணக்கில் கூட ஆகலாம்.

இந்த விபத்தில் சிக்கிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஃபோர்டு நிறுவனம் சில வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறியதால், இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார் இதுவாகும். இந்தியாவில் விற்பனையில் இருந்த சமயத்தில் மக்கள் பலரால் வாங்கப்பட்ட மிகவும் சில ஃபோர்டு கார்களுள் இதுவும் ஒன்று.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால், வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட் கார் க்ளோபல் என்சிஏபி-இல் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. லத்தீன்-என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஈக்கோஸ்போர்ட் முழு 5 நட்சத்திரங்களை 2013இல் பெற்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலைப்பிரதேச பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் கார் ஓட்ட வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு மற்றுமொரு உதாரணம் ஆகும். இத்தகைய பகுதிகளில் விபத்தில் சிக்கினால், உதவி கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம். விபத்தினால் ஏற்பட்ட காயத்துடன் உங்களால் வளைவு, வளைவான சாலைகளில் கார் ஓட்டிச் செல்வது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.


Click it and Unblock the Notifications









