சின்ன வயசுலயே பெரிய ஆளை வளச்சு போட்டுட்டாங்க! இந்தியால விற்பனையிலேயே இல்லாத விலை உயர்ந்த கார்ல வந்தது அவங்களா!

இந்தியாவின் கிரிக்கெட் உலகிற்கும், பாலிவுட் திரை துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர், பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா (Virat Kohli - Anushka Sharma) தம்பதியினரை இதற்கு ஒரு உதாரணமாக நம்மால் கூற முடியும். இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோஹ்லி, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவை, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த வரிசையில் விராட் கோஹ்லியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக திகழும் முகம்மது சிராஜூம் (Mohammed Siraj) கூடிய விரைவில் பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகம்மது சிராஜ் தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

Mahira Sharma Spotted In Jaguar XJ L

இவரும், 27 வயதாகும் இளம் பாலிவுட் நடிகைகளில் ஒருவருமான மஹீரா ஷர்மாவும் (Mahira Sharma) காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் முகம்மது சிராஜ் - மஹீரா ஷர்மா திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இந்த சூழலில், மஹீரா ஷர்மாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், மஹீரா ஷர்மா ஒரு காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அனேகமாக அது ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L) காராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இது இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லாத ஒரு கார் ஆகும்.

Mahira Sharma

கடந்த சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் இது மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 1.19 கோடி ரூபாய் முதல் 2.26 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவின் மற்ற பெரும்பாலான நடிகைகளை போலவே, மஹீரா ஷர்மாவும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். இதற்கு முன்பாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) கார் ஒன்றில் அவர் பயணம் செய்ததை கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹீரா ஷர்மாவிற்கும், அவரது காதலர் என கூறப்படும் கிரிக்கெட் வீரர் முகம்மது சிராஜிற்கும் இடையே நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கலாம். இதில், சொகுசு கார்கள் மீதான காதல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

ஏனெனில் முகம்மது சிராஜூம் கூட மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்ப கூடியவர்தான். அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) ஆகிய கார்கள் எல்லாம் உள்ளன.

அத்துடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற கார்களையும் கூட, முகம்மது சிராஜ் வைத்துள்ளார். முகம்மது சிராஜ் - மஹீரா ஷர்மா ஜோடி கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டு, தங்கள் கார்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 12:53 [IST]
English summary
Mohammed siraj s rumoured girlfriend mahira sharma spotted in jaguar xj l viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+