காசு கொட்டி கெடக்குறதனால இப்படி பண்ணுறாங்களோ.. ஒத்த காருக்காக கோடிகளை வாரி இறைச்சிருக்காரு துல்கர்!
மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக துல்கர் சல்மான் இருக்கின்றார். இவர் தமிழ் மற்றும் பான் இந்திய திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். ஆகையால், மலையாளத்தில் மட்டுமின்றி இன்னும் பிற இந்திய மொழி திரையுலகிலும் துல்கர் சல்மானுக்கு ரசிக பட்டாளம் உண்டு.
இத்தகைய முன்னணி நடிகரே தொகையைப் பொருட்படுத்தாமல் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவருடைய தந்தையும், மலையாள திரையுலகின் ஸ்டார் ஆக்டருமான மம்முட்டியும் மிகப் பெரிய கார் காதலர் ஆவார். இந்த நிலையிலேயே, அவரை போலவே அவருடைய மகன் துல்கர் சல்மானும் மிகப் பெரிய கார் பிரியர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதற்காக அவரிடத்தில் ஏகப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், தன்னுடைய விலை உயர்ந்த கார் கொள்முதல் வாயிலாக தான் ஓர் மிகப் பெரிய கார் காதலன் என்பதையும் துல்கர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் ஃபெர்ராரி நிறுவனத்தின் 296 ஜிடிபி காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ரூ. 5.40 கோடி என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிக விலை உயர்ந்த விலையை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக, மோலிவுட் திரையுலகைச் சேர்ந்த ஒருத்தர் கூட இந்த காரை பயன்படுத்தவில்லை.

இந்த நிலையிலேயே மோலிவுட் திரையுலகிலேயே முதல் ஆளாக துல்கர் சல்மான் இந்த பெர்ராரி 296 ஜிடிபி சூப்பர் காரை வாங்கி இருக்கின்றார். கொஞ்சம் நாளைக்கு முன்னரே இந்த நடிகர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் மாடலை வாங்கினார். இந்த ஆடம்பர காரின் விலை ரூ. 2 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த காரை அவர் இந்த நவம்பர் மாத தொடக்கத்திலேயே வாங்கினார். இந்த நிலையிலேயே முழுமையாக ஒரு வாரம்கூட நிறைவுறாத நிலையில் துல்கர் சல்மான் தற்போது 6 கோடி ரூபாய்க்கு நிகரான விலைக் கொண்ட ஃபெர்ராரி காரை வங்கி இருக்கின்றார். ஏற்கனவே, துல்கர் சல்மான் இடத்தில் போர்ஷே பனமேரா, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 போன்ற அதீத திறனை வெளியேற்றும் கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது ஃபெர்ராரி 296 ஜிடிபி-யும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மிட்-எஞ்சின், ரியர் வீல் டிரைவ் சூப்பர் கார் ஆகும். இந்த காரை தனி பயனாக்குவதற்கான வசதிகளையும் ஃபெர்ராரி வழங்குகின்றது. இவ்வாறு தனி பயனாக்கம் செய்வதனால் அதன் மதிப்பு இன்னும் பலமடங்கு அதிகமாக உயரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிறுவனம் இந்த காரில் வி6 மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. ஃபெர்ராரி, சாலை பயன்பாட்டு வசதிகள் கொண்ட காரில் வி6 மோட்டாரை வழங்குவது இதுவே முதல் முறையாகும். இத்துடன் சேர்த்து ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் இந்த காரில் ஃபெர்ராரி வழங்கி இருக்கின்றது. 3.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜட் மோட்டாரே 256 ஜிடிபி-யில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இது அதிகபட்சமாக 654 எச்பி பவரையும் வெளியேற்றும். இத்துடன், 166 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 830 எச்பி திறனை வெளியேற்றும். இந்த பவரை 8,000 ஆர்பிஎம்மிலேயே இந்த வாகனம் வெளியேற்றும். இத்துடன், 740 என்எம் டார்க்கை 6,350 ஆர்பிஎம்மில் வெளியேற்றும்.
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். இதுதவிர, வெறும் 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும். அதேநேரத்தில் மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை எட்ட இந்த கார் வெறும் 7.3 செகண்டுகளையே எடுத்துக் கொள்ளும்.
வேக திறனை இதன் பிரேக்கிங் சிஸ்டமும் நம்மை வாயை பிளக்கச் செய்யும் வகையில் இருக்கின்றது. உதாரணமாக, ஃபெராரி 296 ஜிடிபி கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். இந்த உச்சபட்ச வேகத்தில் இருந்து பூஜ்ஜியம் கிமீ வேகத்தை வெறும் 107 மீட்டர் இடைவெளியிலேயே எட்டிவிடும்.
இந்த அளவிற்கு மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்தையே 296 ஜிடிபி காரில் ஃபெர்ராரி வழங்கி இருக்கின்றது. இந்த காரில் ப்யூர் இவி மோடில் பயணிக்கும்போது 25 கிமீ தூரம் வரை பெட்ரோல் செலவின்றி பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜை பெற வேண்டும் எனில் ஹைபிரிட் சிஸ்டத்தின்கீழ் வழங்கப்பட்டு இருக்கும் முழுமையாக சார்ஜ் ஆகிய இருக்க வேண்டும்.
மேலும், இந்த ப்யூர் இவி மோடில் பயணிக்கும்போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக சிறிய 7.45 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் இருக்கைகளுக்கு அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பன்முக வசதிகள் கொண்ட சூப்பர் காரையே துல்கர் சல்மான் பெரும் தொகையை செலவு செய்து வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் கொள்முதல் செய்ததன் காரணத்தினால் அவர் ஆல்-ஓவர் இந்தியாவின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றார். மேலும், இந்திய மோட்டார் வாகன உலகின் செய்தின் தலைப்பு செய்தியாகவும் அவர் மாறி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள நடிகர் மிகப் பெரிய கார் காதலராக இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தற்போது கார்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றார். அதாவது, கார்களை தொடர்ச்சியாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார். பல கோடி ரூபாய்களை இதற்காக அவர் செலவிட்டு வருவது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்துப் போக செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









