பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

மலையாள பட உலகில் வளர்ந்துவரும் நடிகையாக விளங்கும் சமயுக்தா மேனன் சொந்தமாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

சினிமா துறைக்கும், ஆட்டோமொபைல் துறைக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. புதியதாக அறிமுகமாகும் வாகனங்கள் சினிமா பிரபலங்கள் மூலமாகவே விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஒரு நடிகர் அல்லது நடிகை துறையில் வளர்வதற்கு ஆட்டோமொபைல் வாகனங்களும் ஒரு காரணமாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

நமது செய்திதளத்தில் புதிய லக்சரி வாகனங்களை வாங்கும் இந்திய சினிமா பிரபலங்களை பற்றியும் இடையே இடையே அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த வகையில் தற்போது வளர்ந்துவரும் இளம் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் புதியதாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் சொகுசு காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

நடிகை சம்யுக்தா மேனன் டெலிவிரி எடுத்திருக்கும் இந்த பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் கார் பளபளப்பான சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிற பெயிண்ட் தேர்விற்கு பெயர், மெல்போர்ன் சிவப்பு மெட்டாலிக் ஆகும். இந்த நிறத்தில் மட்டுமில்லாமல், கார்பன் கருப்பு மெட்டாலிக், காஷ்மீர் சில்வர் மற்றும் மினரல் வெள்ளை மெட்டாலிக் என்ற நிறத்தேர்வுகளிலும் இந்த காரை பெறலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

மேலும், நம்பர் ப்ளேட் உடன் இந்த கார் ஏற்கனவே ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் இந்த வீடியோவின் மூலம் அறிய முடிகிறது. இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் கூபே காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.52.50 லட்சத்தில் இருந்து ரூ.54.90 லட்சங்கள் வரையில் உள்ளன. சம்யுக்தா மேனன் வாங்கி இருப்பது 3 சீரிஸ் க்ரான் லிமௌசைனின் எந்த வேரியண்ட் என்பது உறுதியாக தெரியவில்லை.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

ஏனெனில் லக்சரி லைன், ஐகானின் எடிசன் மற்றும் எம் ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் எடிசன் என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. சம்யுக்தா மேனன் வாங்கி இருப்பது பெட்ரோல் என்ஜின் உடனா? அல்லது டீசல் என்ஜின் உடனா? என்பதும் தெரியவில்லை. 3 சீரிஸ் க்ரான் லிமௌசைனின் எம் ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் எடிசன் ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலின் க்ரான் லிமௌசைன் வெர்சன் முதன்முதலாக கடந்த 2019 ஆட்டோ ஷாங்காய் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் சீன சந்தைக்காக ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த நீண்ட-வீல்பேஸ் கொண்ட பிஎம்டபிள்யூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் கவனம் கிடைத்ததை அடுத்து இந்திய சந்தையிலும் 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

3 சீரிஸ் மாடலின் க்ரான் லிமௌசைன் ஆனது இதனை காட்டிலும் சற்று விலைமிக்க பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை வாங்க முடியாதவர்களின் மாற்று தேர்வாக விளங்குகிறது. வழக்கமான 3 சீரிஸ் உடன் ஒப்பிடுகையில், இதன் வீல்பேஸ் கிட்டத்தட்ட 110மிமீ நீளமானதாக உள்ளது. இந்த க்ரான் லிமௌசைன் காரின் மொத்த நீளம் 4,829மிமீ ஆக உள்ளது. இது ஸ்டாண்டர்ட் 3 சீரிஸ் மாடலை காட்டிலும் 120மிமீ அதிகமாகும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

இந்த கூடுதல் நீளத்தினால் இந்த லக்சரி செடானின் கேபின் சற்று விசாலமானதாக உள்ளது. குறிப்பாக, பின் இருக்கை பயணிகள் நன்கு சவுகரியமாக அமர்ந்து கொள்ளலாம். இதன் விளைவாக பின் இருக்கையில் உள்ளே நுழைவதும், வெளியேறுவதும் இந்த க்ரான் லிமௌசைன் காரில் எளிமையானதாக உள்ளது. ஏனெனில் இதற்கேற்ப பின் கதவுகளின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பின் இருக்கை அமைப்பில் கூடுதல் குஷின் & லெக் ரூம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

3 சீரிஸ் க்ரான் லிமௌசைனின் உட்புற கேபினில் வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்களாக, அகலமான மைய ஆர்ம்ரெஸ்ட், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், சுற்றிலும் கேபின் விளக்குகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை சொல்லலாம். வெளிப்பக்கத்தில், எல்இடி ஹெட்லேம்ப்கள் & L-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்களை பெறும் இந்த காரில் 17-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

3 சீர்ஸ் க்ரான் லிமௌசைனை, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலுடன் குழப்பி கொள்ள வேண்டாம். ஏனெனில் அது கூபே ரக காராகும். ஆனால் இது கணக்கச்சிதமான செடான் காராகும். 3 சீரிஸ் & 5 சீரிஸ் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படுகின்ற 3 சீரிஸ் க்ரான் லிமௌசைனில் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் & 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வுகள் அதிகப்பட்சமாக முறையே 255 பிஎச்பி மற்றும் 188 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை டெலிவிரி பெற்ற இளம் மலையாள நடிகை!! சிவப்பு மெட்டாலிக் நிறத்தில் கார் கண்ணை கவருது!

ஸ்டாண்டர்ட் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் வேரியண்ட்களின் விலைகள் ரூ.80,000-இல் இருந்து ரூ.1 லட்சம் வரையில் அதிகமாக உள்ளன. விற்பனையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் & 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் செடான் மாடல்களுக்கு மெர்சிடிஸ் சி-கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் ஆடி ஏ4 மற்றும் வால்வோ எஸ்60 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mollywood actress samyuktha menon bought new bmw 3 series gran limousine
Story first published: Thursday, December 16, 2021, 23:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X