காரில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்க காரை சேதப்படுத்த தாய் எதிர்ப்பு!

Written By:

சீனாவில், காரில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்பதற்காக, கார் கண்ணாடியை உடைப்பதற்கு தாய் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தாயை சீனாவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வறு வறு என வறுத்தெடுத்து வருகின்றனர். செஜியாங் மாகாணத்தின் யவி நகரில் இந்த சம்பவம் நடந்தது.

சாவி தொலைந்தது

சாவி தொலைந்தது

காருக்குள் தனது 3 வயது குழந்தையை வைத்து பூட்டிவிட்டு, ஒரு வேலையாக வெளியில் சென்று திரும்பியிருக்கிறார் அந்த தாய். அப்போது காரின் சாவியை தொலைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், காருக்குள் அந்த குழந்தை சிக்கிக் கொண்டது.

 வெப்பம்

வெப்பம்

அங்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பூட்டிய காருக்குள் வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தை அலறத் துவங்கிவிட்டது. இதையடுத்து, அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

குழுந்தை உள்ளே சிக்கி வெப்பம் தாளாமல் அழுவதை கண்டும் அந்த தாய் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளார். அப்போது, சிலர் கார் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மீட்க முடிவு செய்தனர். ஆனால், அதற்கு அந்த தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 காரணம்

காரணம்

கார் பூட்டை திறப்பதற்கான மெக்கானிக் வரும் வரை காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளார். மேலும், அந்த பிஎம்டபிள்யூ காரை சேதப்படுத்தக்கூடாது என்றும் அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துளார். குழந்தையைவிட கார்தான் முக்கியம் என்பது போல அவரது நடவடிக்கை இருந்தது. இதனால், அங்கு இருந்தவர்கள் கடுப்பானதுடன், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்பு

மீட்பு

தீயணைப்புப் படையினரிடமும் கார் கண்ணாடியை உடைக்க அந்த தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அதனை காதில் வாங்காமல், கார் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து குழந்தையை அவர்கள் மீட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் அந்த கல் நெஞ்ச தாயை வசை பாடி சென்றனர்.

ட்ரென்டிங் செய்தி

ட்ரென்டிங் செய்தி

இந்த செய்தி சீனாவில் சமூக வலைதளங்களில் ட்ரென்டிங் செய்தியாக மாறியது. அந்த தாயை சகட்டு மேனிக்கு அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்த தப்ப நீங்க செய்யாதீங்க...

அந்த தப்ப நீங்க செய்யாதீங்க...

காருக்குள் குழந்தைகளை விட்டுச் செல்வது மிகவும் முட்டாள்தனமானது. அதுவும் பூட்டி காருக்குள் குழந்தைகளை விட்டுச் செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்களை இந்த சம்பவத்தை ஒரு படமாக மட்டும் படித்து செல்லாமல், பாடமாக மனதில் இறுத்துங்கள்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bizarre things happen around the world and this incident in China is the list topper! A mom refuses to break the window of her BMW to rescue her little toddler who is stuck inside.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark