தமிழ்நாட்ல இப்படி ஒரு அம்மாவா! மகனுக்கு குடுத்த பரிசை பார்த்ததும் எல்லாரும் ஸ்டண் ஆயிட்டாங்க!

அம்மாக்களுக்கு தங்கள் குழந்தைகள்தான் உலகம். எனவே தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மிக கடுமையாக உழைக்கின்றனர். எனினும் குழந்தைகள் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும், செயல்திறன் மிக்க பைக்குகளை வாங்கி தருவதற்கு, ஒரு சில அம்மாக்கள் தயக்கம் காட்டுகின்றனர். விபத்தில் சிக்க நேரிடுமோ? என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அம்மா, தன் மகனுக்கு, மிகவும் விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் (Kawasaki Ninja ZX 10R) பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Mom Surprises Son With Kawasaki Ninja ZX 10R

The revz இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது யூஸ்டு சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். அவர்களிடம் இருந்து யூஸ்டு கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் பைக்கை வாங்கி இந்த அம்மா, அவரது மகனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 18.50 லட்ச ரூபாய் என்ற விலையில் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 23 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

Kawasaki Ninja ZX 10R

ஆனால் யூஸ்டு சூப்பர் பைக் டீலரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதால், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால் என்ன விலையில் வாங்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை. அத்துடன் இது 2021 மாடல் ஆகும். முழு கலர் 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் எல்லாம் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில் 998 சிசி, இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 200 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் பைக்கின் 2025 மாடலிலும் கூட இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பவர் மற்றும் டார்க் அவுட்புட் மட்டும் 2025 மாடலில் சற்று அதிகமாக உள்ளது. கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் பைக்கின் 2025 மாடலின் எடை 207 கிலோ ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க ஒரு பைக்கை அம்மா ஒருவர் தன் மகனுக்கு பரிசாக வழங்கியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் மிகவும் விலை உயர்ந்ததுதான். ஆனால் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என இதனை சொல்லலாம். செயல்திறன் மிக்க ஒரு சூப்பர் பைக்கை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய நபர்களுக்கு, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 18:19 [IST]
English summary
Mom surprises son with kawasaki ninja zx 10r viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+